இந்த நாடுகளுக்கு இந்திய பாஸ்போர்ட் இருந்தால் விசா இல்லாமல் செல்ல முடியும்!

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் இந்திய பாஸ்போர்ட் 81 வது இடத்தில் உள்ளது. இந்திய பாஸ்போர்ட்டை கொண்டு 61 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.

1 /6

தற்போது கொரோனா காலத்திற்கு பிறகு பழையபடி சுற்றலா தளங்கள் உயிர்பெற்றுள்ளது. அதன்படி பல நாடுகள் விசா இல்லாமல் வரும் நடைமுறையை கொண்டு வந்துள்ளன.

2 /6

இந்திய பாஸ்போர்ட் வைத்து இருந்தால் 61 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும். பல நாடுகள் இந்தியர்களுக்கு சிறப்பு சலுகையை வழங்குகிறது.

3 /6

ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள அங்கோலா, கென்யா, ஜிம்பாப்வே, டோகோ, எதியோப்பியா உள்ளிட்டா 21 நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும்.

4 /6

மேலும் ஆசிய கண்டத்தில் உள்ள பூடான், இந்தோனேசியா, தாய்லாந்து, இலங்கை, நேபால் உள்ளிட்ட 16 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்.

5 /6

ஓசியானியாவில் உள்ள குக் தீவு, பிஜீ, மார்சல் தீவு, துவாலு உள்ளிட்ட 8 தீவுகளுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் செல்ல அனுமதி உள்ளது.    

6 /6

வட அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் உள்ள 11 தீவு நாடுகளுக்கும், தென் அமெரிக்காவில் உள்ள பொலிவியாவிற்கும் இந்திய பாஸ்போர்ட்டை கொண்டு விசா இல்லாமல் செல்ல முடியும்.