இந்த 3 இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ICC WTC Final இல் வாய்ப்பு கிடைக்கும்

புதுடெல்லி: இந்தியாவுக்கும் நியூசிலாந்திற்கும் (India vs New Zealand) இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் (ICC World Test Championship Final) இறுதிப் போட்டி ஜூன் 18 முதல் சவுத்தாம்ப்டனில் (Southampton) உள்ள Ageas Bowl இல் நடைபெறும். டீம் இந்தியா 2 ஸ்பின்னர்கள் மற்றும் 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுழற்பந்து வீச்சாளர்களில், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் பெயர்கள் உறுதி செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. ஆனால் வேகப்பந்து வீச்சாளர்கள் தொடர்பான நிலைமை இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. இந்த போட்டியில் விளையாடும் மிகப்பெரிய போட்டியாளர்களான அந்த 3 இந்திய வேகப்பந்து வீச்சாளர்களைப் பார்ப்போம். (அனைத்து புகைப்படங்களும்-பி.சி.சி.ஐ)

1 /5

ஜஸ்பிரீத் பும்ரா (Jasprit Bumrah) இந்திய அணியின் பாட்ச் அட்டாக் ஐ தலைமை தாங்கி வருகிறார், எனவே அவர் லெவன் அணியில் இடம் பெறுவது உறுதி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில், 22.41 சராசரியாக 34 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

2 /5

முகமது ஷமி பந்தை (Mohammed Shami) சவீங்க செயதில் பலே கில்லாடியாவார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் 18 இன்னிங்சில், 19.77 சராசரியாக 36 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

3 /5

இந்தியாவுக்காக 101 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இஷாந்த் சர்மா, தனது சிறந்த அனுபவத்தின் அடிப்படையில் விளையாடும் லெவன் போட்டியில் இடம் பெற முடியும். இங்கிலாந்தில் விளையாடிய அனுபவமும் அவருக்கு உண்டு. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இஷாந்த் 17.36 சராசரியாக 36 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

4 /5

முகமது சிராஜ் (Mohammed Siraj) ஆஸ்திரேலியாவின் கடைசி சுற்றுப்பயணத்தில் தனது டெஸ்ட் தொடரை தொடங்கினார் மற்றும் அவரது சிறந்த ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்தார். அவர் 10 இன்னிங்ஸ்களில் 16 விக்கெட்டுகளை 28.25 சராசரியாக எடுத்துள்ளார். மிகக் குறைந்த அனுபவம் காரணமாக இந்த பெரிய போட்டிக்கு சிராஜ் தேர்வு செய்யப்படுவது சந்தேகமே.

5 /5

உமேஷ் யாதவ் (Umesh Yadav) ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சாளர், ஆனால் பும்ரா, ஷமி, இஷாந்த் போன்ற வீரர்களால் இந்த போட்டியில் இன்னும் அவரது இடம் உறுதிப்படுத்தப்படவில்லை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில், உமேஷ் 18.55 சராசரியாக 29 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.