இந்திய அணிக்கே அதிக சாதகம்... ஐசிசி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு - என்ன காரணம்?

India National Cricket Team: இந்த உலகக் கோப்பை தொடரே இந்தியாவுக்காக நடத்தப்படுவதுதான் என்றும் ஐசிசி இந்தியாவுக்கு சாதகமாக செயல்படுவதாக இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் குற்றஞ்சாட்டி உள்ளார். அவரின் குற்றச்சாட்டு குறித்து இதில் முழுமையாக காணலாம்.

  • Jun 27, 2024, 16:57 PM IST

இந்திய அணி இன்று இங்கிலாந்து அணியுடன் இரண்டாவது அரையிறுதி போட்டியில் மோதுகிறது.

1 /8

ஐசிசி தொடர் அதன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இன்று அரையிறுதி போட்டியும், நாளை மறுநாள் இறுதிப்போட்டியும் நடைபெற இருக்கும் நிலையில் தற்போது தொடர்ந்து இந்திய அணியை சுற்றி சர்ச்சைகளும், குற்றச்சாட்டுகளும் வந்த வண்ணமே உள்ளன.  

2 /8

பந்தை சேதப்படுத்தி அதன்மூலம் ரிவர்ஸ் ஸ்விங்கை பெற்றதாக இந்திய அணியின் மீது பாகிஸ்தான் முன்னாள் வீரர் இன்சமாம் உல் ஹக் குற்றச்சாட்டை வைத்திருந்தார். அதுகுறித்து ரோஹித் சர்மாவும் நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் தற்போது புதிய சர்ச்சை ஒன்றும் கிளம்பியுள்ளது.   

3 /8

அதாவது, வழக்கம்போல் இந்திய கிரிக்கெட் அணிக்கு சார்பாக சர்வதேச கிரிக்கெட் வாரியம் செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இதில் தொடர்ந்து இரு வேறு கருத்துகள் பேசப்பட்டு வரும் சூழலில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கெல் வாகனும் தற்போது இதில் கருத்து தெரிவித்துள்ளார்.   

4 /8

அதாவது இன்று காலை (அங்கு உள்ளூர் நேரப்படி இரவு 8.30 மணிக்கு) நடைபெற்ற தென்னாப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் போட்டியின் போது மைக்கெல் வாகன்,"இந்த போட்டி நிச்சயம் கயானாவில்தான் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் மொத்த தொடரும் இந்தியாவுக்கு சாதகமாக நடைபெறுவதால் மற்ற அணிகள் பாதிக்கப்படுகின்றன" என பதிவிட்டிருந்தார்.   

5 /8

மேலும், இந்திய அணி மோதும் போட்டிகள் அனைத்தும் உள்ளூர் நேரடிப்படி பகலில் நடைபெறுகிறது. அதாவது இந்திய நேரப்படி இரவில் ஒளிபரப்பாகும் என்பதால் அங்கு பகலில் போட்டி நடைபெறுகிறது. இதுகுறித்து மைக்கெல் வாகன் கூறுகையில்,"இந்த உலகக் கோப்பையில் ஒரு போட்டியில் கூட இந்தியா இரவு ஆட்டத்தில் விளையாடவில்லை" என குற்றஞ்சாட்டியிருந்தார்.   

6 /8

இருப்பினும், இது வணிக ரீதியிலான முடிவுதான் என்றாலும் இந்திய அணிக்கு இதில் எவ்வித சாதகமும் இல்லை என ஒருதரப்பு கூறுகிறது. இந்திய அணி பெரும்பாலும் இரவிலேயே டி20 போட்டிகளை விளைாயாடும் என்பதால் வணிக காரணங்களுக்காக இந்தியாவை பகலில் ஆட வைப்பது எவ்விதத்திலும் சரியாகாது என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், இந்திய அணிக்கான இந்த ஏற்பாடால் மற்ற அணிகளுக்கு சிரமம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.   

7 /8

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது அரையிறுதிப் போட்டி கயானாவில் நடைபெறுகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. அதாவது கயானா நேரப்படி ஜூன் 27ஆம் தேதி காலை 10.30 மணிக்கு போட்டி நடைபெறுகிறது.   

8 /8

இருப்பினும் இன்றைய போட்டியில் மழை குறுக்கிட 88% வாய்ப்புள்ளது. இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.