Relationship Tips: கணவர்கள் இந்த 7 பழக்கவழக்கத்தை கடைபிடிப்பதன் மூலம் மனைவியை மகிழ்ச்சியாக வைத்திருக்கலாம், மனைவியை மகிழ்ச்சியாக வைத்திருப்பதன் மூலம் இல்லற வாழ்வும் மகிழ்ச்சியாக இருக்கும். இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
கணவன் மனைவிக்கு இடையிலான திருமண உறவு என்பது கடலுக்குள் மூழ்கி முத்தெடுப்பது போன்றது. மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு அளவு கடந்த பொறுமையும், நிதானமும், தெளிந்த மனமும் தேவை. அந்த வகையில், திருமண உறவை ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க கணவர்கள் பின்பற்ற வேண்டிய 7 பழக்கவழக்கங்கள் குறித்து இந்த புகைப்படத்தொகுப்பில் சற்றே விரிவாக பார்க்கலாம்.
1. வாழ்க்கை இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க நகைச்சுவை ரொம்ப முக்கியம். நகைச்சுவை ரசனையே இல்லாத கணவர் என்றால் வாழ்வில் இனிமை இருக்காது.
2. நம்பிக்கை என்பது திருமண உறவில் மிக முக்கியமானது. கணவர் பொய் சொல்லாமல், செய்த சத்தியம் தவறாமல், குடும்ப விஷயங்களை தள்ளிப்போடாமல், குடும்பத்தினரை ஏமாற்றாமல் இருந்தாலே நம்பிக்கை பெருகி மனைவிக்கு நெருக்கமாகிவிடுவீர்கள்.
3. எப்போதும் மனைவி என்றில்லை குடும்பத்தாரை மரியாதை உடனும், மிகுந்த கவனிப்புடனும் நடத்தினால் இல்லற வாழ்வு சிறக்கும். குடும்பத்தில் பிரச்னை இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கலாம்.
4. திருமண உறவில் ரொமான்ஸ் ரொம்ப ரொம்ப முக்கியம். சின்ன சின்ன ஊடல்கள், கொஞ்சல்கள் இல்லை என்றால் வாழ்வு சலிப்புத்தட்டிவிடும்.
5. மனைவியுடன் அதிக நேரம் செலவழிக்கும் கணவர்தான் அனைவருக்கும் பிடித்தமானவர்கள். வெளியில் சென்றுதான் நேரம் செலவழிக்க வேண்டும் என்றில்லை வீட்டு மொட்டை மாடியில் உட்கார்ந்து பேசுவது, பக்கத்தில் உள்ள கடைக்கு நடந்து சென்று பொருள்கள் வாங்கி வருவது, பூங்காவில் நடைபயணம் செல்வது ஆகியவை கணவனை மனைவிக்கு பிரியமானவராக மாற்றும்.
6. மனைவிக்கு வீட்டில் பாதுகாப்பான உணர்வை அமைத்து கொடுக்க வேண்டும். இது கணவர் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம். பாதுகாப்பான மற்றும் சௌகரியமான உணர்வை ஏற்படுத்தினால் கணவர் மனைவிக்கு நெருக்கமாகிவிடுவார்.
7. மனைவிக்கு ஆசை, கனவுகள், விருப்பங்களுக்கு நீங்கள் உறுதுணையாக நிற்க வேண்டும். அதற்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்கும்போது மனைவி உங்களுடன் நெருக்கமாகிவிடுவார்.
பொறுப்பு துறப்பு: இது பொதுவான தகவல்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை.