8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி சர்ப்ரைசா? ஊதியம் எவ்வளவு உயரும்?

8th Pay Commission: 8வது ஊதியக்குழு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்றும், அடிப்படை சம்பளம் பெரிய அளவில் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகின்றது. இது மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமையலாம்.

8th Pay Commission: ஊழியர்கள் செய்யும் பணிகளுக்கு ஏற்றவாறு, அவற்றுடன் ஒத்துப்போகும் வகையில், ஊதிய விகிதக் கட்டமைப்பை மாற்ற ஆணையம் விரும்புகிறது. இது நியாயமான ஊதிய முறைக்கு வழிவகுக்கும். இந்த வகையில், ஊதியம் வெவ்வேறு நிலைகள் மற்றும் கிரேடுகளில் உள்ள தொழிலாளர்கள் செய்யும் கடமைகளுக்கு ஏற்றவாறு இருக்கும். 8வது ஊதியக் குழுவின் ஊதிய விகிதப் பரிந்துரைகள் பற்றிய அப்டேட் விரைவில் கிடைக்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

1 /11

இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கிவிட்டது. மக்கள் மனதை மகிழ்விக்கும் பல கொண்டாட்டங்கள் இனி வரிசையாக வரும். தீபத் திருநாளாம் தீபாவளியும் நெருங்கி வருகிறது. இந்த நேரத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசு சில பரிசுகளை அளிக்க வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். 

2 /11

8வது ஊதியக் குழுவின் ஊதிய விகிதப் பரிந்துரைகள் பற்றிய அப்டேட் விரைவில் கிடைக்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், இது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் அரசாங்கம் இன்னும் வெளியிடவில்லை. 8வது ஊதியக்குழுவால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் லட்சக்கணக்கான அரசு ஊழியர்களுக்கு சாதகமாக அமையும் என்று கூறப்படுகிறது.

3 /11

அடிப்படை சம்பளம்: 8வது ஊதியக்குழு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்றும், அடிப்படை சம்பளம் பெரிய அளவில் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகின்றது. இது மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமையலாம்.

4 /11

இந்த உயர்வு மத்திய அரசு ஊழியர்களின் வருவாயில் பெரும் அதிகரிப்பை ஏற்படுத்தும். இது அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தலாம், அதாவது அவர்கள் அதிக நிதி ஸ்திரத்தன்மை பெறக்கூடும். அவர்களது குடும்பங்களுக்கும் வாழ்க்கைத் தரமும் மேம்படும். 

5 /11

அடிப்படை சம்பள உயர்வு தவிர, 8வது சம்பள கமிஷன் அலவன்ஸ்களை முழுமையாக மறுபரிசீலனை செய்ய வாய்ப்புள்ளது. அதிகரித்து வரும் பணவீக்க விகிதங்களைக் கருத்தில் கொண்டு, அகவிலைப்படியை (DA) மேம்படுத்துவது பற்றி விவாதிப்பதும் இதில் அடங்கும். மற்ற கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்படலாம்.

6 /11

இது தவிர, ஓய்வுபெற்ற பணியாளர்கள், அதாவது ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத் திட்டங்களும் மேம்படுத்தப்படலாம். இதனால் 8வது ஊதியக் குழுவின் நன்மைகளின் ஒட்டுமொத்த தொகுப்பு மிகவும் கவர்ச்சிகரமானதாகவும் லாபகரமானதாகவும் இருக்கும். 

7 /11

ஊழியர்கள் செய்யும் பணிகளுக்கு ஏற்றவாறு, அவற்றுடன் ஒத்துப்போகும் வகையில், ஊதிய விகிதக் கட்டமைப்பை மாற்ற ஆணையம் விரும்புகிறது. இது நியாயமான ஊதிய முறைக்கு வழிவகுக்கும். இந்த வகையில், ஊதியம் வெவ்வேறு நிலைகள் மற்றும் கிரேடுகளில் உள்ள தொழிலாளர்கள் செய்யும் கடமைகளுக்கு ஏற்றவாறு இருக்கும். 

8 /11

7வது ஊதியக்குழு அமைக்கப்படும்போதே ஃபிட்மெண்ட் ஃபாக்டரை 3.68 மடங்காக உயர்த்த வேண்டும் என கோரிக்கைகள் இருந்தன. ஆனால், அப்போது அது 2.57 மடங்காகவே நிர்ணயிக்கப்பட்டது. ஆகையால் 8வது ஊதியக்குழுவில் கண்டிப்பாக இது 3.68 மடங்காக உயரும் என நம்பப்படுகின்றது.   8வது ஊதியக் குழு அமலுக்கு வந்து, ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரித்தால், அடிப்படை ஊதியம் 18,000 ரூபாயிலிருந்து ரூ. 26,000 ஆக அதிகரிக்கும், அதாவது அடிப்படை சம்பளத்தில் (Basic Salary) சுமார் 44 சதவிகித ஊதிய உயர்வு (44 Percent Salary Hike) இருக்கும்.

9 /11

ஊதிய உயர்வு: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் பிற வசதிகள் மற்றும் சலுகைகளை மேம்படுத்தும் மற்றும் திருத்தும் பணிகளை செய்யும் ஊதியக்குழு இதற்கான பரிந்துரைகளை அரசுக்கு அனுப்புகிறது. இதன் பின்னர் அரசாங்கம் இதை ஆய்வு செய்து அதை அமல்படுத்துகிறது.

10 /11

இதற்கிடையில், ஜூலை 2024 -க்கான டிஏ உயர்வு (DA Hike) பற்றிய அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் செய்யப்படலாம். இந்த முறை அகவிலைப்படி 3%-4% வரை அதிகரிக்கும் என கூறப்படுகின்றது. இதன் பின்னர் மத்திய அரசு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் 53%-54% ஆக உயரும்.

11 /11

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.