80+ வயதிலும் மூட்டு வலி வராமல் இருக்க... உணவுகளும் பழக்கங்களும்!

கீல்வாதம் முதன்மையாக மூட்டுகளை பாதிக்கிறது. மூட்டுகளில் வலி, விறைப்புத் தன்மை மற்றும் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. 

மூட்டு வலியில் இருந்து விடுபட்டு உங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், உங்கள் அன்றாட வாழ்க்கையில் நீங்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய சில விஷயங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம்.

1 /10

ஆரோக்கியமான உணவை உட்கொள்வது, தவறாமல் உடற்பயிற்சி செய்தல் உட்பட சில விஷயங்களில் கவனம் செலுத்தினால், 80 வயதானாலும், மூட்டு வலி ஏற்படாமல் தப்பிக்கலாம்.

2 /10

கீல்வாதம், மூட்டி வலி வராமல் இருக்க கால்சியம் மற்றும் வைட்டமின் டி பெறுவது மிகவும் முக்கியம். கால்சியம் நிறைந்த உணவுகளான பால், ப்ரோக்கோலி மற்றும் முழு தானியங்களை உட்கொள்வதை உறுதி செய்து கொள்ளவும். சூரிய ஒளியில் வைட்டமின் டி உள்ளது. தினமும் சிறிது நேரம் சூரிய ஒளி உடலில் படும்படி பார்த்துக் கொள்ளவும்.

3 /10

இறைச்சிகள், மீன், பருப்பு மற்றும் நட்ஸ் போன்ற நல்ல தரமான புரதங்களை உட்கொள்வது மூட்டு திசு பராமரிப்பு மற்றும் திசுக்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. 

4 /10

உடலில் வீக்கத்தைத் தவிர்ப்பதற்காக, நிறைவுற்ற கொழுப்பு மற்றும் சோடியம் அதிகம் உள்ள பதப்படுத்தப்பட்ட உட்கொள்வதைக் குறைப்பது முக்கியம். ஏனெனில் இது உடலில் இருந்து கால்ஷியத்தை உறிஞ்சி விடும்.

5 /10

உங்கள் தினசரி நடைமுறைகளில் எளிதாக செய்யக் கூடிய சில பயிற்சிகளை செய்வதன் மூலம்,   மூட்டு வலி மற்றும் கீல்வாதம் வருவதற்கான வாய்ப்புகளை நீங்கள் வெகுவாகக் குறைக்கலாம்.

6 /10

மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் எளிய பயிற்சிகளில் ஒன்று நடைபயிற்சி. ஒரு நாளைக்கு குறைந்தது 8,000 அடிகள் நடப்பது, மூட்டுகளை நெகிழ்வாக வைத்திருக்கவும் கீல்வாதத்தைத் தடுக்கவும் உதவும்.

7 /10

அதிகப்படியான ஆல்கஹால் மற்றும் புகைபிடிப்பதைத் தவிர்க்கவும். அளவிற்கு அதிகமாக குடிப்ப்பது, உடலில் உள்ள கால்ஷியத்தை உறிஞ்சி, எலும்புகளை பலவீனமாக ஆக்கி விடும். 

8 /10

உடல் பருமன் மூட்டு வலிக்கு பர எதிரி. அதிக எடையுடன் இருப்பது உங்கள் எலும்புகளை அதிக அழுத்தத்திற்கு உட்படுத்தலாம். இதனால் உங்களுக்கு மூட்டுவலி ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

9 /10

நாள்பட்ட மன அழுத்தம் காரணமாக உடலில் வீக்கம் ஏற்படலாம். இது கீல்வாதத்திற்கு வழிவகுக்கும். எனவே, யோகா தியானம் மூலம் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

10 /10

பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.