EPF Monthly contribution: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி என்பது ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டமாகும். EPF கணக்கில் பணியாளர்கள் மற்றும் நிறுவனங்கள் என இரு தரப்பும் பங்களிக்கின்றனர்.
EPF Monthly contribution: EPF இல் ஒரு ஊழியரின் குறைந்தபட்ச பங்களிப்பு ரூ. 1,800 ஆகவும், அதிகபட்சம் அவர்களின் அடிப்படை சம்பளம் (Basic Salary) மற்றும் அகவிலைப்படியில் (Dearness Allowance) 12 சதவீதமாகவும் உள்ளது. இபிஎஃப் -இல் முதலீடு செய்வதன் மூலம் கோடிகளில் வருமானம் பெற முடியும். சரியான முறையில் திட்டமிட்டு இதில் பங்களித்தால், மிகப்பெரிய கார்பசை நாம் சேமிக்கலாம். ரூ.1.50 கோடி, ரூ.2.25 கோடி அல்லது ரூ.3 கோடி கார்பஸை சேர்க்க, எவ்வளவு தொகையை முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கான கணக்கீட்டைத் தெரிந்துகொள்ளலாம்.
மாதா மாதம் பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யும் பணியாளரா நீங்கள்? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். இபிஎஃப் நிதி பங்களிப்பின் மூலம் இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) பெறக்கூடிய ஒரு மிகப்பெரிய நன்மை பற்றியும், அதன் கணக்கீட்டை பற்றியும் இந்த பதிவில் காணலாம்.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO மூலம் நடத்தப்படும் ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் (EPF) மாதா மாதம் தங்கள் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை, அதாவது 12% -ஐ பணியாளர்கள் டெபாசிட் செய்கிறார்கள். இதே அளவு தொகையை நிறுவனமும் டெபாசிட் செய்கிறது. நிறுவனம் டெபாசிட் செய்யும் தொகையில் 3.67 சதவீதம் பணியாளரின் EPF கணக்கிலும், 8.33 சதவீதம் EPS கணக்கிலும் செல்கின்றன.
பணி ஓய்வுக்கு பிறகான காலத்திற்கான மிக முக்கியமான நிதி பாதுகாப்பாக இபிஎஃப் தொகை (EPF Amount) கருதப்படுகின்றது. இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) குறைந்தபட்சம் 10 வருட சேவைக்குப் பிறகு அல்லது 58 வயதிற்குப் பிறகு தங்கள் ஓய்வூதிய கார்பஸை திரும்பப் பெறலாம்.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), EPF-இல் 8.25 கூட்டு சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80C-ன் கீழ், EPF சந்தாதாரருக்கு, EPF-ல் ஒரு நிதியாண்டில் ரூ.1.50 லட்சம் வரையிலான வைப்புத்தொகைகளுக்கு வரிச் சலுகைகள் கிடைக்கின்றன.
EPF இல் ஒரு ஊழியரின் குறைந்தபட்ச பங்களிப்பு ரூ. 1,800 ஆகவும், அதிகபட்சம் அவர்களின் அடிப்படை சம்பளம் (Basic Salary) மற்றும் அகவிலைப்படியில் (Dearness Allowance) 12 சதவீதமாகவும் உள்ளது. இபிஎஃப் -இல் முதலீடு செய்வதன் மூலம் கோடிகளில் வருமானம் பெற முடியும். சரியான முறையில் திட்டமிட்டு இதில் பங்களித்தால், மிகப்பெரிய கார்பசை நாம் சேமிக்கலாம். ரூ.1.50 கோடி, ரூ.2.25 கோடி அல்லது ரூ.3 கோடி கார்பஸை சேர்க்க (, எவ்வளவு தொகையை முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கான கணக்கீட்டைத் தெரிந்துகொள்ளலாம்.
ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். ஒரு EPF சந்தாதாரர் 25 வயதில் தனது இபிஈப் கணக்கில் (EPF Account) பங்களிக்கத் தொடங்குகிறார் என வைத்துக்கொள்ளலாம். அவர் 60 வயது வரை இதில் பங்களிப்பார். ஆகையால், அவரது முதலீட்டின் காலம் 35 ஆண்டுகளாக இருக்கும். அவர் தொகையை அதிகரிக்காமல் ஒரு நிலையான தொகையை ட்டெபாசிட் செய்கிறார் என வைத்துக்கொள்வோம்.
இபிஎஃப் சந்தாதாரரின் இலக்கு ரூ.1.50 கோடி பணி ஓய்வு கார்பசாக இருந்தால், அவரது மதிப்பிடப்பட்ட மாதப் பங்களிப்பு ரூ.6,350 ஆக இருக்க வேண்டும். அவர் மாதா மாதம் ரூ.6,350 பங்களித்தால், பணி ஓய்வின் போது மொத்த கார்ப்பஸ் தொகையாக ரூ. 1,50,29,133.18 கிடைக்கக்கூடும்.
இபிஎஃப் சந்தாதாரரின் இலக்கு ரூ.2.25 கோடி பணி ஓய்வு கார்பசாக இருந்தால், அவரது மதிப்பிடப்பட்ட மாதப் பங்களிப்பு ரூ.9,507 ஆக இருக்க வேண்டும். அவர் மாதா மாதம் ரூ.9,507 பங்களித்தால், பணி ஓய்வின் போது மொத்த கார்ப்பஸ் தொகையாக 35 ஆண்டுகளில் ரூ.2,24,84,529.95 கிடைக்கக்கூடும்.
இபிஎஃப் சந்தாதாரரின் இலக்கு ரூ.3 கோடி பணி ஓய்வு கார்பசாக இருந்தால், அவரது மதிப்பிடப்பட்ட மாதப் பங்களிப்பு ரூ.12,500 ஆக இருக்க வேண்டும். அவர் மாதா மாதம் ரூ.12,500 பங்களித்தால், பணி ஓய்வின் போது மொத்த கார்ப்பஸ் தொகையாக ரூ.3 கோடி கிடைக்கக்கூடும்.
இந்த கணக்கீடுகள் தகவல் நோக்கத்திற்காக மட்டுமே அளிக்கப்படுள்ளன. உண்மையான கணக்கீடுகள் காலப்போக்கில் செய்யப்படும் மாற்றங்களுக்கு ஏற்ப மாறுபடலாம். சமீபத்திய மற்றும் துல்லியமான வட்டி விகிதம் மற்றும் பிற தகவல்களுக்கு அவ்வப்போது EPFO -இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்க பரிந்துரைக்கப்படுகின்றது.