Uric Acid Level: வெயில் காலத்தில் யூரிக் ஆசிட் நேரடியாக பாதிப்புகளை ஏற்படுத்தாது என்றாலும், ஏற்கனவே இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தலாம்.
உடலில் யூரிக் அமிலம் அதிகரித்தால் கீல்வாதத்திற்கு வழிவகுக்கும். மேலும் கடுமையான மூட்டு வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தி பாதிப்புகளை அதிகரிக்க செய்யும்.
மட்டன், சிக்கன் மற்றும் சில கடல் உணவுகள், மது அருந்துதல், சர்க்கரை பானங்கள் போன்றவரை யூரிக் அமில பிரச்சனையை மேலும் அதிகரிக்க செய்யும்.
சிறுநீரகங்கள் யூரிக் அமிலத்தை வெளியேற்ற முடியாத போது இதன் அளவு அதிகரிக்கிறது. இது மரபியல், உடல் பருமன் அல்லது உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றால் ஏற்படலாம்.
வெப்பமான காலநிலையில் நீரிழப்பு ஏற்பட்டு யூரிக் அமிலத்தை அகற்ற சிறுநீரகங்கள் போராடுகிறது. எனவே, அதிக யூரிக் அமில அளவு உள்ளவர்களுக்கு கோடையில் நீரேற்றமாக இருப்பது மிகவும் அவசியம்.
பழங்கள், காய்கறிகள், குறைந்த கொழுப்புள்ள பால் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. அதே சமயம் இறைச்சி உணவுகளை முடிந்தவரை குறைக்க வேண்டும்.
நிறைய தண்ணீர் குடிப்பது சிறுநீர் மூலம் யூரிக் அமிலத்தை வெளியேற்ற உதவுகிறது. உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்வது யூரிக் அமிலத்தை வெளியேற்ற உதவும்.