கோடையில் குளிர் பானங்களை குடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கும். பெரும்பாலானோர் தாகத்தைத் தணிக்க குளிர் பானங்களைத் தேடுகிறார்கள். குழந்தைகளாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி, குளிர் பானங்களின் சுவை அனைவருக்கும் பிடிக்கும்.
குளிர் பானங்கள் குடிப்பது ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். குளிர் பானத்தை அதிகமாக குடிப்பதால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும். இது பல நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.
சர்க்கரை பானங்கள், பேக்கேஜ் செய்யப்பட்ட ஜூஸ்கள் மற்றும் எனர்ஜி பானங்களில் சர்க்கரை மற்றும் கலோரிகளைத் தவிர வேறு எந்த சத்துக்களும் இல்லை. இதில் செயற்கை சர்க்கரை அதிக அளவில் பயன்படுத்துவதால் உடல் நலத்திற்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
கல்லீரல்: அதிக குளிர்பானம் குடிப்பது கல்லீரலை பாதிக்கிறது. இதன் காரணமாக கொழுப்பு கல்லீரல் உருவாகும் அபாயம் உள்ளது. அதிக அளவில் குளிர் பானங்கள் கல்லீரலைச் சென்று பிரக்டோஸை கொழுப்பாக மாற்றுகிறது.
மூளை: அதிகப்படியான சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு உங்கள் மூளைக்கு தீங்கு விளைவிப்பதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. இந்த விஷயங்களுக்கு நீங்கள் அடிமையாகத் தொடங்கும் போது, அது மூளையின் செயல் திறனை பாதிக்கத் தொடங்குகின்றன
வயிறு: குளிர் பானங்களை அதிக அளவில் குடிப்பதால் வயிற்றில் கொழுப்பு சேரும். ஃப்ரக்டோஸ் குளிர் பானங்களில் காணப்படுகிறது. இது வயிற்றைச் சுற்றி கொழுப்பு வடிவில் குவியத் தொடங்குகிறது. இது உள்ளுறுப்பு கொழுப்பு என்றும் அழைக்கப்படுகிறது.
நீரிழிவு: அதிகப்படியான குளிர் பானங்களை குடிப்பது இன்சுலின் எதிர்ப்பை ஏற்படுத்தும், அத்தகைய சூழ்நிலையில் இரத்த சர்க்கரை அதிகமாகிறது. இன்சுலின் என்பது இரத்தத்தில் இருந்து உயிரணுக்களுக்கு குளுக்கோஸைக் கடத்தும் ஒரு ஹார்மோன் ஆகும்.
உடல் பருமன்: அதிக அளவில் குளிர் பானம் குடிப்பதால் உடலில் கூடுதல் சர்க்கரை ஏற்படுகிறது, இது உடல் பருமன் அதிகரிக்கிறது. சர்க்கரை கலந்த பானங்களை குடிப்பதால் உடலில் லெப்டின் எதிர்ப்பு சக்தி உண்டாகி, உடல் பருமனை உண்டாக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறூப்பேற்காது.