தாய் அணி திரும்பினார் ஹர்திக்... கிடைக்குமா கேப்டன் பதவி - ரோஹித் நிலை என்ன?

IPL 2024 Auction: ஐபிஎல் 2024 சீசனை முன்னிட்டு நட்சத்திர இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா குஜராத் அணியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு டிரேட் செய்யப்பட்டார் என அறிவிக்கப்பட்டது. 

  • Nov 27, 2023, 14:20 PM IST

 

 


 


 

 

 

1 /7

குஜராத் அணியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா டிரேட் செய்யப்பட்டதாக (ரூ.15 கோடி) மும்பை இந்தியன்ஸ் அணியால் அறிவிக்கப்பட்டது. பாண்டியா மும்பை இந்தியன்ஸ் ஜெர்ஸி அணிந்த புகைப்படத்தை வெளியிட்டு 'HOME' என்று தலைப்பிட்டு அந்த X பதிவு வெளியிடப்பட்டது.   

2 /7

குஜராத் அணியில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக இருந்தார். தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாற்றப்பட்ட நிலையில், குஜராத் அணிக்கு சுப்மான் கில் கேப்டனாக நீடிப்பார் என அறிவிப்பு. 

3 /7

ஹர்திக் பாண்டியா குஜராத் அணிக்கு கடந்த 2 சீசன்களாக விளையாடிய நிலையில், தற்போது மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்துள்ளார். 2022 மெகா ஏலத்தை முன்னிட்டு அவர் மும்பையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.  

4 /7

மும்பை அணிக்காக ஹர்திக் பாண்டியா 7 சீசன்களில் 92 போட்டிகளில் விளையாடி 1476 ரன்களையும், 42 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டலான ஆல்ரவுண்டராக வலம்வந்தார்.

5 /7

தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் திரும்பி வந்துள்ள நிலையில், அவர் சாதரண வீரராக தொடர்வாரா அல்லது கேப்டனாக விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.   

6 /7

ரோஹித் சர்மா கேப்டனாக 5 கோப்பைகளை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெற்றுத் தந்துள்ளார். தற்போது அவருக்கு பதில்  ஹர்திக் பாண்டியாவை நியமித்தால் ரோஹித் சாதரண வீரராக தொடர்வாரா என்ற கேள்வியும் உள்ளது.   

7 /7

மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் கேம்ரூன் க்ரீன் (ரூ.17.50கோடி) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு டிரேட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.