முதுகெலும்பு பிரச்சனைகளை தீர்த்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தூக்கம் எப்படி உதவும்?

Healthy Spine Practice: ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நமது எலும்புகள் மற்றும் முதுகெலும்புகள் வலுவாக இருப்பது அவசியம். நாம் எப்படி உறங்குகிறோம் என்பது நமது முதுகுத்தண்டில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்  

முதுகெலும்பு பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்க நாம் செய்யக்கூடிய பல விஷயங்கள் உள்ளன. ஆரோக்கியமான முதுகெலும்பைப் பெற எப்படி உறங்க வேண்டும், எப்படி படுக்க வேண்டும் என்பதற்கான சில குறிப்புகள் இங்கே

1 /7

ஆரோக்கியமான முதுகெலும்பு அமைவது என்ற முதுகுத்தண்டு ஆரோக்கியத்திற்கு அடிப்படை ஆகும். முதுகெலும்பு பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்க நீங்கள் செய்யக்கூடிய பல விஷயங்கள் உள்ளன. அதில் ஒன்று சரியான முறையில் உறங்குவது. 

2 /7

ஆழ்ந்த உறக்கம் என்பது உடலுக்கும் மனதிற்கும் ஓய்வைத் தருவதோடு, ஆரோக்கியத்திற்கும் அவசியமானது. மனதின் மூலமான உயிர் சக்தியை ஊக்குவிக்கும் உறக்கம், மனதை இலகுவாக்குகிறது

3 /7

ஆழ்ந்த உறக்கம் என்பது உடல் ஆரோக்கியத்திற்கு அடிப்படையானது. சிலர் படுத்த அடுத்த நிமிடத்திலேயே தூங்கிவிடுவார்கள். எங்கு படுத்தாலும் கவலையில்லாமல் தூங்கிவிடுவார்கள். இது ஒரு வரம் என்று சொல்வதைக் கேட்டிருக்கலாம். ஆனால், எங்கு  படுத்தாலும், நாம் படுக்கும் நிலை என்பது ஆரோக்கியத்தைக் கொடுக்கும் அல்லது கெடுக்கும்

4 /7

நாம் உறங்கும் நிலை என்பது, நீண்ட கால அடிப்படையில் நமது முதுகுத்தண்டில் தாக்கத்தை ஏற்படுத்தும்

5 /7

மிகவும் மென்மையான மெத்தையில் படுப்பதும் முதுகுத்தண்டை பாதிக்கும், அதே சமயம் மிகவும் உறுதியான ஒரு மெத்தையும் முதுகுத்தண்டை பாதிக்கும். உங்கள் கழுத்தின் இயற்கையான வளைவை ஆதரிக்கும் தலையணையைப் பயன்படுத்தவும். 

6 /7

அதிக தடிமனான தலையணைகள் அல்லது தலையணைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது உங்கள் கழுத்து மற்றும் தோள்பட்டை தசைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.

7 /7

படுக்கைக்கு முன் காஃபின் மற்றும் ஆல்கஹால் தவிர்க்கவும்: காஃபின் மற்றும் ஆல்கஹால் இரண்டும் தூக்க முறைகளை சீர்குலைத்து முதுகுவலியை ஏற்படுத்தும். காஃபின் உங்களை விழித்திருக்கும் மற்றும் தூங்குவதை கடினமாக்குகிறது, அதே நேரத்தில் ஆல்கஹால் தசைகள் மற்றும் மூட்டுகளில் பாதிப்பை ஏற்படுத்தும்