Jupiter Transit Effects in Tamil: தேவகுரு என அழைக்கப்படும் குரு பகவான், மே 1 ஆம் தேதி மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறார். மேஷ ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவானால் 4 ராசிக்காரர்கள் குபேர யோகத்தை பெறுவார்கள்.
குரு பகவான் வாழ்க்கையில் மகிழ்ச்சி திருமண யோகம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறது. இந் நிலையில், குரு பெயர்ச்சியினால், வாழ்க்கையில், செல்வம், மகிழ்ச்சி ஆகியவற்றை பெற இருக்கும் அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
குரு பகவான் மேஷ ராசியிலிருந்து விலகி மதியம் 12:59 மணிக்கு ரிஷப ராசிக்குள் நுழைகிறார். பின்னர் ஜூன் 12 ஆம் தேதி ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பார். இந்த காலகட்டத்தில் குறிப்பிட்ட சில ராசிகள் அபரிமிதமான செல்வத்தை பெறுவார்கள்.
குரு பகவான், வரும் அக்டோபர் 9 ஆம் தேதி, வக்ர நிலையை அடைவார். இதற்குப் பிறகு, பிப்ரவரி 4, 2025 அன்று வக்ர நிவர்த்தி அடைவார். 2025 ஆம் ஆண்டில், மே 14 ஆம் தேதி, தேவகுரு ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு மாறுவார்.
மேஷம்: குரு பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும். இந்த காலகட்டத்தில், மேஷ ராசியின் செல்வ வீட்டில் தேவகுரு அமர்ந்திருப்பார். இதனால் வருமானம் அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். பணத்திற்கு தட்டுப்பாடே இருக்காது.
கடகம்: குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்றுள்ளார். எனவே இந்த ராசிக்காரர்களுக்கு எப்போதும் சுப பலன்கள் கிடைக்கும். பணவரவு கூடும். கைக்கு வரமாக இருந்த பணத்தை மீட்க முடியும். முதலீடு மூலம் நல்ல இலாபம் கிடைக்கும். வருமானத்திற்கு குறைவே இருக்காது.
சிம்மம் : சூரியக் கடவுளை அதிபதியாக கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு விஷ்ணு பகவானின் சிறப்பு அருள் உண்டு. எனவே, ரிஷப ராசியில் சஞ்சரிக்கும், தேவகுரு சிம்ம ராசிக்காரர்களுக்கு குபேர யோகத்தை வழங்குவார். வேலையில், தொழிலில், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். வருமானம் பெருகும்.
கன்னி : குரு பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு நற்பலன்களை கொடுக்கும். இந்த ராசியின் அதிர்ஷ்ட வீட்டில் பெயர்ச்சியாகும் குரு பகவானால், பண வரவு அதிகரிக்கும். தற்போது கன்னி ராசியிலும் கேது உள்ளதால், பண விஷயத்தில் எந்தப் பிரச்னையும் இருக்காது. பல பரிமாணங்களில் இருந்து செல்வம் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.