Sani Nakshatra Peyarchi Palangal: சனி கிரகத்தில் ஏற்படும் மாற்றம் ஜோதிடத்தில் மிகப் பெரிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. அதன்படி கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி சனி பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைந்துள்ளார். இதனால் அரச வாழ்க்கை, பணம், புகழ், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள் எவை என்பதை இந்த பதிவில் காணலாம்.
Sani Nakshatra Peyarchi Palangal: ஜோதிடத்தின் படி சனி தற்போது கும்பத்தில் பயணித்து வருகிறார். இதனிடையே 06 ஏப்ரல் 2024 சனிக்கிழமை மாலை 03.55 மணிக்கு குருவின் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்துள்ளார். சனியின் நட்சத்திர பெயர்ச்சி அனைத்து ராசிக்காரர்களுக்கும் சாதகமான மற்றும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சனியால் அரச வாழ்க்கை, பணம், புகழ் கிடைக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
மேஷ ராசிக்காரர்களுக்கு சுப பலன் கிடைக்கும். வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு பெறலாம். நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். சொந்த தொழிலை விரிவுபடுத்தலாம்.
ரிஷப ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். தொழிலில் உயர்வு பெறலாம். வேலை இடமாற்றம் ஏற்படலாம். சம்பளம் உயரவு பெறலாம். வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.
மிதுன ராசிக்காரர்களுக்கு வெளிநாடு வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக பயணம் மேற்கொள்ளலாம். ஆன்மிக செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். உங்களின் துறையில் முன்னேற்றம் அடைவீர்கள்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். மனைவியுடன் புனித யாத்திரைக்கு செல்லாம். இந்த காலக்கட்டத்தில் சொத்து அல்லது ஆடம்பரப் பொருட்களை வாங்கலாம்.
கன்னி ராசிக்காரர்களுக்கு ஆக்கப்பூர்வமான பலன் கிடைக்கும். சட்டத் துறையில் உள்ளவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். இப்போது முதலீடு செய்யலாம். இப்பொது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல பலன் கிடைக்கும். தொழில் வலுவாக இருக்கும். வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். சகோதர சகோதரிகளுடனான உறவுகள் வலுவடையும். பயணங்கள் மூலம் சாதகமாக பலன் கிடைக்கலாம்.
மகர ராசிக்காரர்களின் பொருளாதார நிலை மேம்படும். பணத்தை சேமிப்பதில் வெற்றி பெறுவீர்கள். பூர்வீகச் சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். ஆன்மீகத்தில் ஆர்வம் காட்டுவீர்கள்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.