கொலஸ்ட்ரால் என்பது நம் உடலில் மெழுகு போன்ற ஒரு பொருள். கொலஸ்ட்ராலில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் என்னும் LDL கொலஸ்ட்ரால். மற்றொன்று உயர் அடர்த்தி கொழுப்புப்புரதம் என்னும் HDL கொலஸ்ட்ரால்.
இரத்தத்தில் அதிக அளவு எல்டிஎல் இருந்தால்,மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. அதே நேரத்தில், HDL அதாவது இரத்தத்தில் உள்ள நல்ல கொலஸ்ட்ரால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இதய ஆரோக்கியத்திற்கும் செல்கள் உருவாகவும் நல்ல கொலஸ்ட்ரால் அவசியம் என்றாலும், ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றுவது அவசியம். கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் தங்கள் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்க வழக்கங்களில் அதிக கவனம் செலுத்துவது அவசியம்.
பார்லியில் உள்ள பீட்டா-குளுக்கன், ஆன்டி-கார்சினோஜெனிக், மற்றும் ஆன்டி-ஹைபர்கொலஸ்டிரோலெமிக் பண்புகள் இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது. இது இரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைத்திருக்கும்.
தேங்காய் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கிறது. அதை சரியான அளவில் எடுத்துக் கொண்டால் உடலுக்கு நல்லது. அதே போன்று தேங்காய் எண்ணெய் மிகவும் ஆரோக்கியமான எண்ணெய் வகைகளில் ஒன்று.
சைவ உணவு உண்பவர்களுக்கு புரதத்தை அள்ளிக் கொடுக்கும் உணவு சோயாபீன் சிறந்த வழி. கொழுப்பு, நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ள சோயாபீன் கொலஸ்ட்ராலைக் குறைக்க பெரிதும் உதவும்.
வாதுமை பருப்பில் ஒமேகா-3 கொழுப்புகள் நிறைந்துள்ளன. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் வாதுமை பருப்பு உதவும்.
பூண்டில் உள்ள அல்லிசின், இதய தமனிகளில் சேரும் கொழுப்பை எரிக்க வல்லது. தினமும் காலை பச்சை பூண்டு எடுத்துக் கொள்வது கொலஸ்ட்ராலுக்கு அருமருந்து.
சியா விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே, சியா விதைகள் கொலஸ்டிராலை எரித்து கொழிப்பை கரைக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.