Tips to sleep better: இரவில் நன்றாக தூங்க இத செய்யுங்க

Tips to sleep better: தூக்கமின்மை மக்களின் மன ஆரோக்கியத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.

Tips to sleep better: தூக்கமின்மை என்பது தற்போதைய வாழ்க்கை முறையின் மிகப்பெரிய பிரச்சனையாகிவிட்டது. கடுமையான மன அழுத்த சூழ்நிலைகளில், இரவில் போதுமான தூக்கம் கிடைக்காமல் போகலாம். இது தொடர்ந்தால், அது படிப்படியாக உடல்நலப் பிரச்சினையாக மாறும். தூக்கமின்மை மக்களின் மன ஆரோக்கியத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

1 /4

சிலர் படுக்கைக்குச் செல்வதற்கு முன் தங்கள் எல்லா பிரச்சனைகளையும் பற்றி சிந்திக்கத் தொடங்குவார்கள். இதனால் சரியாக தூங்குவது கடினம். எனவே படுக்கைக்குச் செல்வதற்கு முன் உங்கள் பிரச்சனைகளையும் பற்றி யோசிப்பதை நிறுத்தவும்.

2 /4

படுக்கைக்குச் செல்வதற்கு முன் உடல் வெப்பநிலையை சரிசெய்துக்கொள்ளவும். இதனுடன் படுக்கைக்குச் செல்வதற்கு முன் உங்கள் அறை வெப்பநிலையை சரிசெய்யவும். படுக்கையறையில் வெப்பநிலை குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தால் உங்கள் தூக்கத்தின் தரத்தை பாதிக்கும்.

3 /4

உறங்கும் முன் வெந்நீரில் குளிப்பதால் மன நிம்மதியாக இருக்கும். இது மன அழுத்தத்தை குறைக்க உதவும். சில ஆய்வுகளின்படி, தூங்கும் முன் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.    

4 /4

செல்போன், டிவி, லேப்டாப் போன்றவற்றின் வெளிச்சம் தூக்கத்தை கெடுக்கும். எனவே தூங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் அவற்றை அணைத்துவிடவும்.   (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)