பூரிக்க வைக்கும் புளியின் ஆரோக்கிய நன்மைகள்

Health Benefits of Tamarind: புளி இந்தியாவில் நீண்ட காலமாக உணவில் பயன்படுத்தப்படுகிறது. இது ரசம், சாம்பார், சட்னி வகைகள், சாஸ் மற்றும் சில நேரங்காளில் இனிப்புகளை செய்வதிலும் பயன்படுத்தப்படுகின்றது. புளி உணவின் சுவையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இது ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. புளி ஆயுர்வேதத்தில் ஒரு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. புளியின் ஆரோக்கிய நன்மைகளை இந்த பதிவில் காணலாம்.

1 /6

புளி ஆரோக்கியத்திற்கு நல்லது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முதல் செரிமானத்தை நன்றாக வைத்திருத்தல் மற்றும் இதயத்தை நோய்களிலிருந்து காப்பது என புளி பலவித பணிகளை செய்கிறது. சி, ஈ மற்றும் பி வைட்டமின்கள் தவிர, கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் ஃபைபர் ஆகியவையும் புளியில் ஏராளமாக உள்ளன. மேலும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் இதில் உள்ளன. புளி நமது உடல் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் பயனளிக்கிறது.   

2 /6

உங்கள் முகத்தில் புள்ளிகளோ வடுக்களோ இருந்தால், புளியை பயன்படுத்துவது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். புளியில் ஆல்பா-ஹைட்ராக்ஸி அமிலங்கள் நிறைந்துள்ளன. புளி சருமத்தை உள்ளே இருந்து சுத்தப்படுத்த உதவும்.

3 /6

புளி சாப்பிடுவது எடையைக் குறைக்க உதவுகிறது. ஏனெனில் இதில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் உள்ளன. கூடுதலாக, புளியில் ஹைட்ராக்சிசிட்ரிக் அமிலம் நிறைந்துள்ளது. இது அமிலேசைத் தடுப்பதன் மூலம் பசியைக் குறைக்கிறது. புளி நார்ச்சத்து நிறைந்தது மற்றும் அதில் கொழுப்பும் இருப்பதில்லை. 

4 /6

புளி பழங்காலத்திலிருந்தே ஒரு நல்ல செரிமான சீர்படுத்தியாக பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் இதில் டார்டாரிக் அமிலம், மாலிக் அமிலம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை உள்ளன. இது மலச்சிக்கலை போக்கவும் பயன்படுகிறது. புளி சாப்பிடுவதால் வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகள் குணமடைகின்றன. புளியில் அதிக அளவில் வைட்டமின் சி உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது வைரஸ் தொற்றுகளையும் உடலில் இருந்து விலக்கி வைக்கிறது. இதை சாப்பிடுவது முகத்தில் பளபளப்பை ஏற்படுத்துவதோடு கூந்தலையும் இது பிரகாசிக்கச் செய்யும். 

5 /6

புளி இதயத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. புளி சக்திவாய்ந்த ஆக்ஸிடெண்டாகும். இது ஃப்ரீ ரேடிகல்களின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளிலிருந்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

6 /6

புளி விதை சாறு இயற்கையில் அழற்சி எதிர்ப்பு சக்தி கொண்டது. இது இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைக்கவும் நீரிழிவு நோயாளிகளுக்கு கணைய திசு சேதத்தை தடுக்கவும் உதவுகிறது. புளியில் காணப்படும் ஆல்ஃபா-அமிலேஸ் என்ற நொதி இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.