பச்சை வாழைப்பழத்தை பார்த்தால் விடாதிங்க... உடலுக்கு அவ்வளவு நல்லது இருக்கு!

Green Banana Health Benefits: செவ்வாழை பழம் போல் பச்சை வாழைப்பழத்திலும் ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கின்றன. அந்த வகையில், செவ்வாழைப் பழத்தை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகளை இதில் காணலாம்.

  • Mar 23, 2024, 01:10 AM IST

பச்சை வாழைப்பழம் கிராமப்புறம் முதல் பெருங் நகரங்கள் வரை கிடைக்கும். ஒருவேளை, பச்சை வாழைப்பழத்தை பார்த்தால் நிச்சயம் அதை வாங்கி சாப்பிடுங்கள்.

1 /7

பச்சை வாழைப்பழத்தில் உள்ள நார்ச்சத்தின் பெயர் Resistant Starch என்றழைக்கப்படுகிறது. இது எளிதாக கரையும் நார்ச்சத்தாகும். நன்மை பயக்கும் குடல் பாக்ட்ரீயாவுக்கு உணவளிப்பதன் மூலம் செரிமானத்திற்கு உதவும்.  

2 /7

மேலும் பச்சை வாழைப்பழத்தில் இருக்கும் நார்ச்சத்து உங்களின் குடல் இயக்கத்தை சீராக்கி, மலச்சிக்கல் பிரச்னையை தீர்க்கும்  

3 /7

பச்சை வாழைப்பழத்தில் இருக்கும் போட்டாஸியம் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. போட்டாஸியம் ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவும். இது நெஞ்சு வலி வருவதை தடுக்கும். 

4 /7

பச்சை வாழைப்பழத்தில் இருக்கும் நார்ச்சத்து, செரிமான இயக்கத்தை மெதுவாக்கி குடல் ஊட்டச்சத்தை உள்ளிழுத்துக் கொள்ள உதவும்.  

5 /7

பச்சை வாழைப்பழத்தில் இருக்கும் Resistant Starch உங்களின் வயிறு நிரம்பிய உணர்வை தரும். அதன்மூல், நீங்கள் அதிக கலோரிகளை எடுத்துக்கொள்ள மாட்டீர்கள். இது உடல் எடை குறைப்பில் உதவும்.   

6 /7

மற்ற வாழைப்பழங்களை போல் அல்லாமல் பச்சை பழத்தை சாப்பிட்டால் உங்களின் ரத்த சர்க்கரை அளவில் பெரிய தாக்கம் இருக்காது.   

7 /7

பச்சை வாழைப்பழத்தில் போட்டாஸியம் மட்டுமின்றி வைட்டமிண் சி மற்றும் வைட்டமிண் B6 ஆகியவை உள்ளது.