TAXI gardens: மாடித் தோட்டம் சரி, 'டாக்ஸி தோட்டம்' கேள்விப்பட்டதுண்டா?

விவசாயம் என்பது காலத்திற்கு ஏற்றாற்போல மாறிக் கொண்டே வருகிறது. நிலத்தில் மட்டுமே பயிர்கள் பயிரிட்ட காலம் மாறி மொட்டை மாடிகளில் தோட்டங்கள் உருவாகின. தற்போது கார்களின் மேற்கூரையில் விவசாயம் நடைபெறுவது ஆச்சரியமாக உள்ளது...

கோவிட் தொற்றுநோய் பரவலால், இயல்பு வாழ்க்கை முடங்கிப்போக, பாங்காக்கில் உள்ள பல வண்டி ஓட்டுனர்களின் வாழ்வாதரம் முடங்கிப்போனது. எனவே உள்ளூர்வாசிகள் இருக்கும் வளங்களைப் பயன்படுத்தி வருவாய் ஈட்டுகின்றனர்...

(Photograph:AFP)

ALSO READ | நடுரோட்டில் மிக உற்சாகமாக நடனம் ஆடி வந்த புதுமண தம்பதிகள் 

 

1 /5

கோவிட் கட்டுப்பாடுகளால் தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் டாக்ஸிகள் ஓடவில்லை. இதனால் வாகன நிறுத்துமிடங்கள் டாக்ஸிகளின் கல்லறைகளாக தோன்றத் தொடங்கின. எனவே அவற்றிற்கு உயிர் கொடுக்கவும், தங்கள் வாழ்வாதரமாகவும் அந்த டாக்ஸிகளை பயன்படுத்தி விவசாயம் செய்கின்றனர்   (Photograph:AFP)

2 /5

உள்ளூர் மக்கள் தலைநகரின் மேற்கில் ஒரு திறந்தவெளி கார் பார்க்கிங்கில் மினி காய்கறி தோட்டங்கள் மற்றும் குட்டி குளங்களை உருவாக்கியுள்ளனர். (Photograph:AFP)

3 /5

டாக்ஸிகளின் பொன்னெட்டுகள் சிறிய காய்கறித் தோட்டங்களை அமைத்துள்ளனர். கத்தரிக்காய், மிளகாய், வெள்ளரிக்காய், கோவைக்காய் துளசி போன்றவை பயிரிடப்படுகின்றன   (Photograph:AFP)

4 /5

இந்த வண்டிகளின் உதிரி பாகங்களும் பயனற்ற டயர்களும் சிறிய குளங்களாக மாற்றப்பட்டுள்ளன. (Photograph:AFP)

5 /5

இருக்கும் வளங்களை பயன்படுத்தி ஆக்கப்பூர்வமான முயற்சிகளை மேற்கொண்டு தரமான பொருட்களை விளைவிக்கின்றனர். அவற்றை விற்று பணம் சம்பாதிக்கின்றனர். (Photograph:AFP)