Cricket: பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை நியூசிலாந்து கைவிட்டது ஏன்?

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரை ரத்து செய்தது நியூசிலாந்து...

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடவிருந்தன. இந்த போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறவிருந்தன.
ராவல்பிண்டியில் ஒரு நாள் போட்டி தொடர் தொடங்கவிருந்த நிலையில் போட்டிகளை ரத்து செய்து திடீர் அறிவிப்பு தடாலடியாக வெளியிடபப்ட்டது.

(Photograph:AFP)

Also Read | T20 கேப்டன் பதவில் இருந்து விலகும் விராட் கோலிக்கு Michael Vaughan சொல்வதென்ன?

1 /8

பாகிஸ்தானில் கடந்த 10 நாட்களாக நியூசிலாந்து அணி பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. திடீரென போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் போட்டித் தொடர் ரத்து அறிவிப்பு வெளியானது. (Photograph:AFP)

2 /8

தங்கள் அணி வீரர்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என்பதால் நியூசிலாந்து அரசு வேறு எந்த தகவலையும் வெளியிடவில்லை என தெரிவித்துள்ளது. (Photograph:AFP)

3 /8

ஐந்து போட்டிகள் கொண்ட டி 20 தொடர் லாகூரில் நடைபெறவிருந்தது.  (Photograph:AFP)

4 /8

நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கு எந்த தகவலும் வரவில்லை என்று பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது தெரிவித்தார் (Photograph:AFP)

5 /8

அதற்கு முன்னதாக ராவல்பிண்டியில்  ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானுடன் நியூசிலாந்து அணி விளையாடவிருந்தது. (Photograph:AFP)

6 /8

பாகிஸ்தானில் 2009 இல் இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பிறகு, அந்நாட்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் போக்கு மாறிவந்தது. (Photograph:AFP)

7 /8

தற்போது பாதுகாப்பு காரணங்களால், நியூசிலாந்து சுற்றுப்பயணத்தை ரத்து செய்திருப்பது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய பின்னடைவாகும். (Photograph:AFP)

8 /8

பாகிஸ்தானில் இங்கிலாந்து அணி மேற்கொள்ளவிருந்த கிரிக்கெட் சுற்றுப்பயணம் நடைபெறுமா என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளன. இங்கிலாந்து பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் வருமா என்பதை அடுத்த சில நாட்களில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்யும். (Photograph:AFP)