Lok Sabha Election 2024, DMK - Congress Alliance: வரும் மக்களவை தேர்தலில் திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ கட்சிகள் போட்டியிடுக்கூடிய தொகுதிகளின் உத்தச பட்டியலை இங்கு காணலாம்.
Lok Sabha Election 2024: திமுக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் தொகுதிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இவை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயூஎம்எல், கொமதேக ஆகிய கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் தமிழ்நாட்டில் 9 தொகுதிகளிலும், சிபிஎம், சிபிஐ, விசிக ஆகிய கட்சிகள் தலா 2 தொகுதிகளிலும், மதிமுக, ஐயூஎம்எல், கொமதேக ஆகியவை தலா 1 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. புதுச்சேரியில் காங்கிரஸ் போட்டுயிடுகிறது. கொமதேக மட்டும் உதய சூரியனில் போட்டியிடுகிறது.
தொகுதிகளில் எண்ணிக்கை மட்டுமே தற்போது முழுவதுமாக உறுதியாகி உள்ளது. மேலும், விசிக, கொமதேக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளுக்கு குறிப்பிட்ட தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது. விசிக கடந்த தேர்தலை போலவே தனித் தொகுதிகளான சிதம்பரம் மற்றும் விழுப்பரம் ஆகியவற்றில் போட்டியிடுகிறது. ஐயூஎம்எல் ராமநாதபுரம், கொமதேக நாமக்கல் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
இதில், திமுக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், மதிமுக ஆகியவைக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும். குறிப்பாக, காங்கிரஸ் கடந்த 2019 மக்களவை தேர்தலிலும் 9 இடங்களிலேயே தமிழ்நாட்டில் போட்டியிட்டது.
காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை, திருவள்ளூர் உள்ளிட்ட தொகுதிகள் மீண்டும் வழங்கப்பட உள்ளன. கரூர், திருச்சி தொகுதிகளுக்கு பதிலாக திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை தொகுதிகளும் வழங்க பட உள்ளதாக கூறப்படுகின்றன.
திமுகவின் வேட்பாளர் நேர்காணலும் நேற்றே நிறைவடைந்த நிலையில், ஓரீரு நாள்களில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளின் பட்டியல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தற்போது திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ கட்சிகள் இந்தந்த இடங்களில் போட்டியிடலாம் என கூறப்படுகிறது. அதனை இங்கு காணலாம். இருப்பினும், இதுகுறித்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகிவில்லை.
திமுக: வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, ஸ்ரீபெரும்புதூர், நீலகிரி, திருவண்ணாமலை, அரக்கோணம், கரூர், சேலம், தர்மபுரி, பெரம்பலூர், தூத்துக்குடி, தஞ்சாவூர், ஈரோடு, பொள்ளாச்சி, வேலூர், திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், ஆரணி, கிருஷ்ணகிரி
காங்கிரஸ்: கன்னியாகுமரி, சிவகங்கை, மயிலாடுதுறை, கோவை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருவள்ளூர், தேனி. சிபிஎம்: மதுரை, கடலூர். சிபிஐ: நாகை, திருப்பூர். மதிமுக: திருச்சி