மூலிகைகளின் ராணியாக மகுடம் சூடும் துளசிக்கு மவுசு அதிகமாம்!!!

கொரோனா போன்ற கொடிய நோயால் மக்கள் பாதிக்கப்பட்டு, அதற்கான நிவாரணத்தை கண்டறிய பலரும் அல்லும் பகலும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.  இந்த நிலையில், பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட துளசிக்கு அதிக தேவை ஏற்பட்டிருக்கிறதாம்… எனவே வர்த்தகரீதியில் துளசி வளர்ப்பு அதிகரித்துள்ளது. துளசியின் விதவிதமான புகைப்படத் தொகுப்பு...

வர்த்தகரீதியில் துளசி வளர்ப்பு அதிகரித்துள்ளது.  துளசி, நமது வீடுகளில் வளர்க்கப்படும் ஒரு தாவரம்... மூலிகைத் தாவரம் மட்டுமல்ல, இந்தியர்களின் மனதில் சிறப்பான இடம் பிடித்திருக்கும் துளசியின் புகைப்படத் தொகுப்பு உங்களுக்காக….  

துளசி ஒரு மூலிகைத் தாவரம். இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் வளரும் இந்தத் தாவரம் ஏறத்தாழ 50 செ.மீ வரை வளரக் கூடியது. துளசியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை. இந்து மதத்தில் மிகவும் முக்கியமான இடம் துளசிக்கு உண்டு.  வீடுகளில் துளசியை வளர்த்து பூசிக்கும் வழக்கமும் உண்டு.

இந்து மதத்தில் துளசி, செல்வத்தின் அதிபதியாகவும் மகாவிஷ்ணுவின் துணைவியாகவும் கருதப்படுகிறது.

பிருந்தாவன நகரம், பண்டைய காலத்தில் துளசிச் செடிகள் நிறைந்த காடாக இருந்ததால் இப்பெயர் பெற்றது.  துளசியை சமஸ்கிருத மொழியில் பிருந்தா என்று அழைப்பார்கள்.   

நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி (கஞ்சாங்கோரை, திருத்துழாய்), காட்டுத் துளசி என பல வகை துளசிகள் உண்டு.

துழாய் (நீல நிற துளசி), துளவம், ஸ்ரீதுளசி, ராமதுளசி என துளசிக்கு பல்வேறு பெயர்கள் உண்டு.

கார்த்திகை மாதம் வளர்பிறையில் 12ஆம் நாளான துவாதசிக்கு ‘பிருந்தாவன துவாதசி என்று பெயர் உண்டு.  அன்று மகாவிஷ்ணு துளசியை திருமணம் செய்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அன்று நெல்லிக்கும் துளசிக்கும் திருமணம் செய்து வைத்து சர்க்கரைப் பொங்கல் படையலிட்டு வணங்கும் பழக்கம் பல இந்துக் குடும்பங்களில் உண்டு.   

1 /8

மாடங்களில் வளர்க்கப்படும் துளசி, மாடத் துளசி... இது துழாயா? இல்லை துளவமா?

2 /8

பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகைச் செடியாக விஞ்ஞானிகள் கருதும் துளசியை, நற்குணங்கள் கொண்ட பெண்ணாக பாவித்து, அருமருந்தான நெல்லி மரத்தின் ஒரு பகுதியை மணமகனாக பாவித்து துளசித் திருமணம் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் துவாதசியன்று இந்தியாவில் நடத்தப்படுகிறது. துளசியும், நெல்லியும் சேர்ந்தால் என்ன கெமிஸ்ட்ரி என்பதை விஞ்ஞானிகள் கூறட்டும். ஆண்டாண்டு காலமாய் துளசிக்கும் நெல்லிக்கும் திருமணம் செய்து வைத்து மகிழ்வது நிம்மதியையும் வாழ்வில் வளத்தையும் கொடுப்பதாக நம்பும் இந்துக்கள் இந்த சடங்கை இடைவிடாமல் ஆண்டுதோறும் நடத்துகின்றனர்

3 /8

வீடுகளில் தொட்டிகளில் வளர்க்கும் துளசி

4 /8

மணத்திற்கு என்று ஒரு குணம் உண்டு. நல்மனதை வழங்கும் நற்குணம் கொண்டது துளசிச் செடி

5 /8

மருத்துவ குணம் கொண்ட துளசியை காயவைத்து பொடியாக்கி பல நாட்கள் வைத்து பயன்படுத்தலாம். பல்வேறு மருந்துகள் தயாரிக்கவும் துளசி பயன்படுத்தப்படுகிறது

6 /8

துளசியை, காட்ல பாத்திருக்கலாம், வீட்ல  பாத்திருக்கலாம், மாடத்தில பாத்திருக்கலாம்... இப்படி கோலத்தில பாத்திருக்கீங்களா?

7 /8

வட இந்தியாவில் உள்ள மதுரா, வடமதுரை என்றும் அழைக்கப்படுகிறது. கண்ணன் சிறுவயதில் விளையாடிய துளசி வனம், பிருந்தாவனம்...

8 /8

பெரும்பாலான இந்துக்கள் பக்தி நோக்கில் துளசியை வீட்டு மாடங்களில் வளர்த்தால், பலர் அதை மருத்துவ குணங்களுக்காக வளர்க்கின்றனர்