Guess Who? முகத்தை பாஸ்போர்ட்டால் மறைத்த நாயகி! யாரென்று தெரிகிறதா?

Guess Who: ஒரு சில நடிகைகள் தங்களது முகத்தை மறைத்து கேண்டிட் ஆக போட்டோக்களை பதிவிடுவதுண்டு. அப்படி, ஒரு நாயகி, தனது இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்களை முகத்தை காண்பிக்காமல் வெளியிட்டிருக்கிறார். அவர் யார்? இங்கு பார்ப்போம். 

1 /7

இந்த நடிகை, முகத்தை பாஸ்போர்ட்டால் மறைத்து போட்டோ எடுத்து பதிவிட்டுள்ளார். இதுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் யார்? 

2 /7

அந்த நடிகை வேறு யாருமில்லை, நம்ம ‘வாரிசு’ பட நடிகை ராஷ்மிகா மந்தனாதான். இவர், தென்னிந்திய அளவில் மிகப்பெரும் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 

3 /7

ராஷ்மிகா, கன்னட படமான கிரிக் பார்டி என்ற படம் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானார். தொடர்ந்து அர்ஜுனா புத்ரா, சமக் உள்ளிட்ட படங்களிலும் நடித்தார்.

4 /7

ராஷ்மிகாவிற்கும் கன்னட நடிகர் ரக்‌ஷித் ஷெட்டிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது. ஆனால், இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என முடிவெடுத்து பிரிந்து விட்டனர். 

5 /7

ராஷ்மிகா, தற்போது விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் கீதா கோவிந்தம் மற்றும் டியர் காமரேட் உள்ளிட்ட படங்களில் ஒன்றாக நடித்தனர். 

6 /7

ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் கதாநாயகியாக நடித்திருந்த படம், அனிமல். இந்த படத்தில் அவர் கீதாஞ்சலி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது கதாப்பாத்திரத்திற்கு இந்திய அளவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 

7 /7

ராஷ்மிகா, தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் இவர் வித்தியாசமான தோற்றத்தில் இடம் பெற்றுள்ளதாகவும், அதனால் இவரது தற்போதைய தோற்றத்தை எந்த சமூக வலைதளத்திலும் பதிவிட முடியாது என்றும் தெரிவித்துள்ளார். அவர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் இத்தாலிக்கு செல்வதாக தெரிவித்துள்ளார்.