Potassium in Weight Loss: நம்மில் பலர் உடல் பருமனால் அவதிப்படுகிறோம். உடல் எடையை குறைக்க பல வித முயற்சிகளை மேற்கொள்கிறோம்.
எடை இழப்புக்கான உங்கள் முயற்சியில் பொட்டாசியம் ஒரு இன்றியமையாத அங்கமாக உள்ளது. அத்துடன் இதில் பல ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. பொட்டாசியம் நிறைந்த உணவு எடையைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், உங்கள் இதயம் மற்றும் சிறுநீரக ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். உடல் எடையை குறைக்க உங்கள் உணவில் சேர்க்கக்கூடிய 5 பொட்டாசியம் நிறைந்த உணவுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
எடை இழப்பு: உடல் எடையை இழக்க மக்கள் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சிலர் ஜிம் செல்கிறார்கள், சிலர் உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள்.
பொட்டாசியம்: எடை இழப்புக்கான உங்கள் முயற்சியில் பொட்டாசியம் ஒரு இன்றியமையாத அங்கமாக உள்ளது. அத்துடன் இதில் பல ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன.
பொட்டாசியம் நிறைந்த உணவுகள்: பொட்டாசியம் நிறைந்த உணவு எடையைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், உங்கள் இதயம் மற்றும் சிறுநீரக ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். உடல் எடையை குறைக்க உங்கள் உணவில் சேர்க்கக்கூடிய 5 பொட்டாசியம் நிறைந்த உணவுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
வாழை: வாழைப்பழம் ஒரு சூப்பர்ஃபுட் ஆகும். வாழைப்பழம் தவிர, வாழைக்காய் கொண்டு சாம்பார்/கறி/ராய்தா/கூட்டு/பஜ்ஜி ஆகியவற்றையும் செய்யலாம்.
ஆளி விதைகள்: ஆளி விதைகளில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் இன்னும் பல ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதை பச்சையாக சாப்பிடலாம் அல்லது ஸ்மூத்தியில் கலந்து உட்கொள்ளலாம். இவை எடையைக் குறைக்கவும் உதவுகின்றன.
மீன்: புரதம் மட்டுமல்லாமல், மீனில் பொட்டாசியம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் நிறைந்துள்ளன. இது மூளையின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
கொண்டைக்கடலை: நீங்கள் சைவ உணவு உண்பவராக இருந்தால், ஆரோக்கியமான எடை இழப்புக்கு இதுவே சிறந்த வழி. இதில் புரதம் நிறைந்துள்ளது மற்றும் சாலட், சப்ஜி, சுண்டல் போன்ற வடிவங்களில் இதை சாப்பிடலாம்.
ராஜ்மா: ராஜ்மாவில் பொட்டாசியம் மற்றும் புரதம் நிறைந்துள்ளது. இதை சாப்பிடுவதன் மூலம் உங்கள் தினசரி பொட்டாசியம் தேவையில் 35% சேர்த்துக்கொள்ளலாம்.