Fat Burning Drinks:: உடல் எட்ட்டை அதிகரிப்பு இந்த நாட்களில் பலரை பாடாய் படுத்தி வருகிறது. இதனால் பல வித பக்க வுளைவுகளும் ஏற்படுகின்றன.
காலையில் வயிறு காலியாக இருக்கும் நேரத்தில் செரிமானத்தை மேம்படுத்தும் ஆரோக்கியமான பானங்களை குடிப்பது எடை இழப்புக்கு உதவியாக இருக்கும். இந்த பானங்கள் உடலின் செரிமான அமைப்பை பலப்படுத்துகின்றன. இதனால் உணவு நன்றாக ஜீரணமாகும். இந்த பானங்கள் குறைந்த கலோரிகளைக் கொண்டிருக்கின்றன. இவை நாளின் தொடக்கத்தில் கலோரி உட்கொள்ளலைக் குறைத்து, வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, அதிக கலோரிகளை எரிக்க உதவுகின்றன. மேலும், இந்த பானங்களின் ஊட்டச்சத்துக்களை நன்றாக உறிஞ்சும் திறன் காலையில் உடலுக்கு அதிகம். எனவே, காலையில் சரியான பானங்கள் குடிப்பது எடையைக் கட்டுப்படுத்த உதவும். காலையில் குடிக்கக்கூடிய பானங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
இன்றைய காலகட்டத்தில் அனைவரும் தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். மக்கள் தங்கள் உடல் எடையை பராமரிக்க பல வழிகளை பின்பற்றுகிறார்கள்.
உடல் எடையைக் குறைக்க, ஜிம்மில் மணிக்கணக்கில் செலவிடுகிறார்கள். டயட்டில் இருக்கிறார்கள். இருப்பினும், பல சமயங்களில், இவற்றாலும் எந்த நல்ல பலனையும் பெறுவதில்லை. எனினும் சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் நாம் நம் உடல் எடையை குறைக்கலாம்.
செரிமானத்தை மேம்படுத்தும் ஆரோக்கியமான பானங்களை குடிப்பது எடை இழப்புக்கு உதவியாக இருக்கும். இந்த பானங்கள் உடலின் செரிமான அமைப்பை பலப்படுத்துகின்றன. இதனால் உணவு நன்றாக ஜீரணமாகும்.
காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சை பழச்சாறு கலந்து குடிப்பது செரிமான அமைப்பை மேம்படுத்தி உடல் எடையை குறைக்க உதவுகிறது.
மஞ்சள் நீரில் குர்குமின் உள்ளது, இது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் மற்றும் எடையைக் குறைக்க உதவுகிறது. வெந்நீரில் அரை டீஸ்பூன் மஞ்சளைக் கலந்து குடிக்கலாம். இதற்கு பதிலாக மஞ்சள் தேநீரையும் அருந்தலாம்.
க்ரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் மற்றும் எடை குறைக்க உதவும். தொப்பையை குறைக்க, கிரீன் டீயை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
சீரக நீர் செரிமானத்தை மேம்படுத்தி உடல் எடையை குறைக்க உதவுகிறது. ஒரு ஸ்பூன் சீரகத்தை இரவில் ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊறவைத்து காலையில் குடிக்கலாம். சீரகம் ஜீரண சக்தியை அதிகரித்து, மெதுவாக செரிக்கும் உணவை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது. குடல்களை சுத்தமாக வைத்திருக்கவும் உதவுகிறது. உடலில் வீக்கத்தைக் குறைக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சீரகத்தில் உள்ளன. இது எடை இழப்பு செயல்முறையை துரிதப்படுத்துகிறது.
புதினா நீர் செரிமானத்தை மேம்படுத்தி உடல் எடையை குறைக்க உதவுகிறது. புதினா இலைகளை வெதுவெதுப்பான நீரில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.