Cholesterol Control Tips: மாறிவரும் உணவு மறை மற்றும் வாழ்க்கை முறை காரணமாக நாளுக்கு நாள் பலரிடம் கொலஸ்ட்ரால் பிரச்சனை அதிகமாகிக்கொண்டு இருக்கின்றது. ஓட்ஸ், பருப்பு வகைகள், மீன், உலர் பழங்கள் என இயற்கையான வழியில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த உதவும் சில உணவுகள் பற்றி இங்கே காணலாம்.
Cholesterol Control Tips: இந்நாட்களில் பலரிடம் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை காணப்படுகின்றது. கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதால் இதய கோளாறுகள் உட்பட இன்னும் பல பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. ஆகையால் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைப்பது மிக அவசியமாகும். கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் சரியான உணவை தேர்வு செய்து உட்கொள்ள வேண்டும்.
கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால் நம் உடலை பிற நோய்களும் தாக்கக்கூடும். இயற்கையான முறையில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் கொண்டு வர நாம் நமது டயட்டில் சேர்க்க வேண்டிய சில உணவுகளை பற்றி இங்கே காணலாம்.
ஓட்ஸ்: சமீப காலமாக ஓட்ஸ் ஒரு சத்தான காலை உணவாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அதிக பயன்பாட்டில் உள்ளது. கெட்ட கொலஸ்ட்ராலைத் தடுக்கவும் ஓட்ஸ் உதவுகிறது. ஓட்ஸில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இந்த நார்ச்சத்து நமது செரிமான மண்டலத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை இரத்தத்தில் சேராமல் தடுக்கிறது. ஒரு கப் ஓட்ஸுடன் உங்கள் நாளைத் தொடங்குவதால், நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கலாம்.
மீன்: கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க நினைப்பவர்களுக்கு மீன் ஒரு வரப்பிரசாதம். மீனில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உடலில் உள்ள ட்ரைகிளிசரைடுகளை அகற்றி வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன. மீன் உண்பதால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறையும், நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிக்கும். அசைவ உணவு உட்கொள்பவர்கள் உதை அடிக்கடி உட்கொள்ளலாம்.
உலர் பழங்கள்: பாதாம், பிஸ்தா மற்றும் அக்ரூட் பருப்புகள் அனைத்தும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்தவை. இவை கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகின்றன. சிற்றுண்டி சாப்பிடும் நேரங்களில் இவற்றை உட்கொள்ளலாம்.
அவகேடோ: அவகேடோ பழம் நம் நாட்டில் அவ்வவு பிரபலம் அல்ல. ஆனால் சமீபகாலமாக நம் நாட்டு சந்தைகளிலும் இவை அதிகமாக கிடைக்கின்றன. உலர்ந்த பழங்களைப் போலவே, அவகேடோ பழத்திலும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகம் உள்ளன. இது கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது. அதுமட்டுமல்லாமல், இரத்தத்தில் அதிகரிக்கும் கொலஸ்ட்ரால் அளவையும் இது தடுக்கிறது.
பருப்பு வகைகள்: பருப்பு வகைகள் தாவர அடிப்படையிலான புரதம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களின் நல்ல மூலமாக உள்ளன. அவற்றை அடிக்கடி சாப்பிடுவதால் உடலுக்கு அதிக நார்ச்சத்து கிடைக்கும். இது இரத்தத்தில் சேரும் கெட்ட கொழுப்பை அகற்ற உதவுகிறது. ராஜ்மா, பயறு, கொண்டைக்கடலை ஆகியவை தினசரி உணவில் இடம்பெறுவதை உறுதி செய்வது நல்லது.
பப்பாளி: பழுத்த பப்பாளியில் பாப்பைன் என்ற கலவை உள்ளது. இதன் மூலம் செரிமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கிறது. இது கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் உதவுகிறது. பப்பாளியில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
ஆலிவ் எண்ணெய்: நாம் சமையலில் பயன்படுத்தும் ரிஃபைண்ட் எண்ணெய்க்குப் பதிலாக ஆலிவ் எண்ணெயைக் கொண்டு உணவைச் சமைப்பது நல்லது. ஆலிவ் எண்ணெய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்த எண்ணெயில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருப்பதால், கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது. ஆலிவ் ஆயிலின் விலை சாதாரண எண்ணெயை விட சற்றே அதிகம், எனினும் இதன் ஆரோக்கிய நன்மைகள் மிக அதிகம்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.