Beware of bank rule: வங்கியின் கேஷியர் தவறுதலா பணம் அதிகமாக கொடுத்துவிட்டாலும், அதற்கு சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரின் கடமையும் பொறுப்பும் என்ன?
வங்கியில் இருக்கும் அதிகாரியின் சிறு தவறு காரணமாக, வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிக பலன் அடைவது பல நேரங்களில் நடக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்த தவறு சில விதிகளின் கீழ் சரி செய்யப்படுகிறது.
வங்கி காசாளர் அதிக பணம் கொடுத்துவிட்டால், சந்தோஷப்படாதீர்கள், அதற்கு பின்விளைவுகளை அனுபவிக்க வேண்டியிருக்குக்ம்.
ஏடிஎம்களில் சில முறை இரட்டிப்பு பணம் வந்துவிடுவதை கேள்விப்பட்டிருக்கிறோம். தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக இது நிகழ்கிறது. அதே நேரத்தில் வங்கியில் உள்ள காசாளர்கள் வாடிக்கையாளர்களுக்குத் தவறுதலாக அதிகப் பணத்தைக் கொடுப்பதும் நடக்கிறது.
வாடிக்கையாளர்கள் வேண்டுமென்றே பணத்தை எடுத்துச் சென்றால், அவர்களுக்கு சிக்கல் ஏற்படலாம். சமீபத்தில் இதேபோன்ற ஒரு வழக்கு டெல்லியில் நடைபெற்றது.
டெல்லியில் கரோல் பாக்கில் அமைந்துள்ள தனது வங்கியின் கிளையிலிருந்து பணம் எடுக்கச் சென்ற வாடிக்கையாளருக்கு காசாளர் இரட்டிப்பாகக் கொடுத்துவிட்டார்
மீடியா செய்திகளின்படி, பணம் எடுக்கும் படிவத்தில் நான்கு லட்சம் ரூபாய் எழுதப்பட்டிருந்தும் காசாளர் எட்டு லட்ச ரூபாயை ராஜேஷிடம் கொடுத்தார். ஆனால், வாடிக்கையாளர் அதிக பணத்தை வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார். பிறகு தவறு கண்டுபிடிக்கப்பட்டு, வாடிக்கையாளரிடம் இருந்த பணத்தை பெறும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன
வாடிக்கையாளர் பணத்தை வங்கியில் திருப்பித் தரவில்லை என்றால், குற்றம் சாட்டப்பட்ட வாடிக்கையாளர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யலாம். இதுபோன்ற விதிகளை தெரிந்துக் கொள்ளுங்கள். அதுமட்டுமல்லாது, சம்பந்தப்பட்ட வங்கியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து தனித்தனியாக தகவல் வைத்திருப்பது அவசியம்.