Diabetes Control Tips: உலகம் முழுவதும் நாளுக்கு நாள் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு இருக்கின்றது. நமது ஆரோக்கியமற்ற உணவு முறையும் வாழ்க்கை முறையும் நீரிழிவு நோய் உருவாக பெரிய காரணங்களாக இருக்கின்றன.
Diabetes Control Tips: ஒருவருக்கு ஒருமுறை நீரிழிவு நோய் வந்து விட்டால் அதை முழுமையாக குணப்படுத்த முடியாத என்பது ஒரு கசப்பான உண்மையாகும். எனினும் சில எளிய வழிமுறைகளில் இதை கண்டிப்பாக கட்டுக்குள் வைத்திருக்கலாம். நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் சில இயற்கையான பானங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். இவற்றை எளிதாக வீட்டிலேயே செய்ய முடியும்.
நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும். சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை கண்டிப்பாக அவர்கள் தவிர்க்க வேண்டும். இதோடு நீரழிவு நோயாளிகளுக்கு உடல் செயல்பாடும் மிக அவசியமாகும்.
அவ்வப்போது மருத்துவரை சென்று பார்த்து, இரத்த சர்க்கரையின் அளவை பரிசோதித்துக் கொள்வது மிக அவசியமாகும். நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் சில எளிய இயற்கையான பானங்கள் பற்றி இங்கே காணலாம்.
காலை நேரத்தில் நீரிழிவு நோயாளிகள் பாகற்காய் சாறு குடிப்பது மிகவும் ஏற்றதாக கருதப்படுகின்றது. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதோடு மட்டுமில்லாமல் இன்னும் பலவித ஆரோக்கிய பிரச்சனைகளையும் சரி செய்கிறது. இதன் கசப்பு நீரிழிவு நோயாளிகளை பொறுத்தவரை இனிப்பான ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகின்றது.
நீரிழிவு நோயாளிகளுக்கு அதிகப்படியான பலன்களை கொடுக்கும் விஷயங்களில் நெல்லிக்காய்க்கு முதன்மையான இடம் உள்ளது. இது இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரிப்பதை தடுக்கின்றது. இதைத் தவிர இதில் இன்னும் பல ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் இது வளர்ச்சியை மாற்றத்தையும் மேம்படுத்துகிறது. கொழுப்பை கட்டுப்படுத்தவும் நெல்லிக்காய் சாறு உதவும்.
மஞ்சளில் உள்ள குர்குகுமின் பலவித ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. மஞ்சள் பால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது. இதில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன. பலவித நோய்களை எதிர்த்துப் போராட மஞ்சள் நமக்கு உதவியாக இருக்கிறது.
கற்றாழையில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. இது பல நோய்களின் சிகிச்சையில் பயன்படுகிறது. இரத்த சர்க்கரை அளவை குறைக்கவும் இது உதவுகிறது. நீரிழிவு நோயாளிகள் தினமும் கற்றாழை சாறு குடிக்கலாம். எனினும் ஒரு முறை மருத்துவரிடம் ஆலோசித்த பின்னர் இதை உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது
கிரீன் டீயில் ஆரோக்கியத்திற்கு தேவையான பண்புகள் உள்ளன. இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிக ஏற்றது. தினமும் கிரீன் டீ குடித்து வந்தால் டைப் 2 நீரிழிவு நோயின் அபாயம் குறைகிறது. அதுமட்டுமின்றி இதில் உள்ள பண்புகள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.