ஒரே வாரத்தில் எடை குறைய இந்த பானங்களை குடிச்சா போதும்: ஒல்லி பெல்லி கேரண்டி

Homemade Jucies For Weight Loss: பெரும்பாலும் பலருக்கு எடையை குறைப்பதற்கான தேவை உள்ளது. ஆனால், இதற்காக ஜிம் செல்லவோ, உடற்பயிற்சிகளை செய்யவோம், டயட்டை பின்பற்றவோ நேரமும் வசதியும் அனைவருக்கும் இருப்பதில்லை.

Homemade Jucies For Weight Loss: தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க சில எளிய, இயற்கையான வழிகளும் உள்ளன. சில பானங்கள் மற்றும் சாறுகளின் மூலம் நாம் உடல் எடையை எளிதாக குறைக்கலாம். இவற்றில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை எடை இழப்பில் உதவுவதோடு, உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அளித்து, உடலில் உள்ள நச்சுகளையும் நீக்குகின்றன. அப்படிப்பட்ட பானங்கள் பற்றி இங்கே காணலாம். 

1 /8

பீட்ரூட் சாறு: பீட்ரூட்டில் உள்ள கலவைகள் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன. இது வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கிறது. இந்த வழியில் இது எடை இழப்புக்கு உதவுகிறது. இந்த ஜூஸ் செய்ய பீட்ரூட்டை வெட்டி மிக்ஸியில் போட்டு அதனுடன் சிறிது கேரட், ஆப்பிள் மற்றும் ஒரு துண்டு இஞ்சியை சேர்க்கவும். இந்த சாறின் சுவை அற்புதமாக இருக்கும். இந்த ஜூஸை காலையில் குடித்து வந்தால், உடல் எடை குறைவதுடன், உடலின் ஆற்றல் மட்டமும் மேம்படும்.

2 /8

தக்காளி சாறு: நாம் தினமும் சமையலில் பயன்படுத்தும் தக்காளியில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. தினமும் காலையில் தக்காளி சாறு உட்கொள்வதால், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம். இது உடல் எடையை குறைக்க உதவுவதோடு, உடலில் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்கும். 

3 /8

க்ரீன் டிடாக்ஸ் சாறு: உடல் எடையை குறைக்க பச்சை டிடாக்ஸ் ஜூஸ் தயாரித்து குடிக்கலாம். கீரை, கோஸ், வெள்ளரி, எலுமிச்சை சாறு மற்றும் இஞ்சி சேர்த்து இந்த சாறு தயார் செய்யலாம். இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது செரிமானத்தை மேம்படுத்துவதிலும், கொழுப்பை குறைப்பதிலும் நன்மை பயக்கும். இதன் மூலம் உடலுக்கு நீர்ச்சத்து மற்றும் நன்மை பயக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கிடைத்து, உடலில் உள்ள நச்சுகள் நீக்கப்படுகின்றன. 

4 /8

கேரட் சாறு: நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் மற்றும் சத்துக்கள் நிறைந்த கேரட் சாறு குடிப்பது உடல் எடையை வேகமாக குறைக்க உதவும். இதைக் குடிப்பதால் நீண்ட நேரத்திற்கு வயிறு நிரம்பிய உணர்வுடன் இருக்கிறது. இதனால் ஆரோக்கியமற்ற தேவையற்ற உணவுகளை நாம் உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது. கேரட் உட்கொள்வது கலோரி உட்கொள்ளலை குறைக்கிறது. இதில் உள்ள ஆரோக்கிய நன்மைகளால் செரிமானம் சீராகிறது, வளர்ச்சிதை மாற்றம் மேம்படுகிறது, கண் பார்வை பலப்படுகிறது. 

5 /8

சிட்ரஸ் சாறு: புளிப்பு-இனிப்பு சுவைகொண்ட இந்த சாற்றை தினமும் காலையில் குடித்து வந்தால், ஆரோக்கியத்தில் மட்டுமின்றி சருமத்திலும் அற்புதமான விளைவுகள் ஏற்படும். இந்த சாறு தயாரிக்க, ஆரஞ்சு, திராட்சைப்பழம் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலக்க வேண்டும். இதில் குறைவான கலோரிகள் இருப்பதோடு இதில் வைட்டமின் சி மர்றும் நார்ச்சத்தும் அதிக அளவில் உள்ளன. 

6 /8

வெள்ளரிக்காய் சாறு: வெள்ளரிக்காய் சாறும் பருகினால் உடல் எடை குறையும். குறிப்பாக கோடையில் இந்த ஜூஸ் ஆரோக்கியத்திற்கு நல்லது. வெள்ளரிக்காய் சாற்றில் அதிக நீர்ச்சத்து இருப்பதால் உடலை இது நீரேற்றமாக வைத்திருக்கும். இது தவிர, இது உடலில் உள்ள அழுக்குகள் மற்றும் நச்சுகளையும் நீக்குகிறது. இதை குடிப்பதன் மூலம் வாயுத்தொல்லை, உஷ்ணப் பக்கவாதம் ஆகியவறிலிருந்து உடலைப் பாதுகாக்கவும் முடியும்.

7 /8

இளநீர்: இளநீரில் அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. கோடை காலத்தில் இளநீர் குடிப்பதால் உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கிறது. இதனால் உடல் எடையை குறைப்பதில் உதவி கிடைக்கின்றது. இளநீர் சருமத்திற்கும் மிகவும் நல்லதாக கருதப்படுகின்றது. குறிப்பாக உடல் நிலை உஷ்ணமாக உள்ளவர்களுக்கு இளநீர் மிக நல்லது.

8 /8

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.