சைவ உணவு பிரியர்களுக்கான புரோட்டீன் நிறைந்த ‘சில’ சூப்பர் உணவுகள்!

உடலுக்கு வைட்டமின்கள் தேவைப்படுவது போல, புரதமும் ஆரோக்கியத்திற்கு அவசியம். உடலில் உள்ள செல்களை சீர் செய்து உடல் வளர்ச்சிக்கு புரதம் உதவுகிறது. இறைச்சி உணவுகளில் தான் அதிக புரோட்டின் கிடைக்கும் ஒரு பொதுவான எண்ணம் பெரும்பாலானோருக்கு உள்ளது. இன்று நாம் தாவர அடிப்படையிலான புரோட்டீன் உணவுகளை அறிந்து கொள்ளலாம்.

1 /5

பன்னீர் புரோட்டின் நிறைந்த உணவுகளில் ஒன்றாலும். அதிலும், டோபு பன்னீரில் புரோட்டீன் மிகவும் அதிகமாக இருக்கும். 

2 /5

பாசி பயறில் புரோட்டின் நிறைந்துள்ளது.  முளை கட்டிய பாசி பயறில் உங்களுக்கு இரட்டை புரதம் கிடைக்கும். இதில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இதன் காரணமாக செரிமானம் சிறப்பாக இருக்கும்.

3 /5

பருப்பு வகைகளில் புரோட்டீன் நிறைந்துள்ளது. உளுந்து, வேர்க்கடலை ஆகியவற்றை சாப்பிடுவதன் மூலம் அதிக புரதச்சத்து கிடைக்கும். அவற்றை ஊறவைத்து முளை கட்டும் போது சத்துக்கள் இரு மடங்காகும்.

4 /5

எள்ளில் புரதச்சத்து நிறைந்துள்ளது. ஒரு டீஸ்பூன் எள் சுமார் 3 கிராம் புரதத்தை வழங்குகிறது. ஊறவைத்த எள்ளை உட்கொள்வது புரதத்தை அதிகரிக்க உதவுகிறது. கொலஸ்ட்ரால் அளவையும் கட்டுப்படுத்துகிறது.

5 /5

சோயாவில்  36 சதவீதம் முதல் 56 சதவீதம் வரை புரதச்சத்து உள்ளது. இது தவிர, இது ஃபோலேட், கால்சியம், நார்ச்சத்து, இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றின் சிறந்த மூலமாகும்.