பீர் மட்டும் குடிப்போர் கவனத்திற்கு! இதையும் தெரிஞ்சுக்கோங்க!

பல ஆண்டுகளாக பீர் ஒரு பிரபலமான மதுபானமாக இருந்து வருகிறது. பீர் குடிப்பதால் கெடுதல்கள் தான் அதிகம் உள்ளது தவிர, நன்மைகள் மிகவும் கம்மியாகத்தான் உள்ளது.

1 /7

பீர் எப்போதுமே கொண்டாட்டங்களில் முதன்மையானதாக உள்ளது. ஆல்கஹால் பிடிக்காதவர்கள் கூட பீர் மட்டும் குடிப்பது வழக்கம்.

2 /7

பொதுவாக பீர்களில் ஆல்கஹால் அளவு 6 முதல் 8 சதவிகிதம் மட்டுமே உள்ளன. பீரில் சில தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. எனவே, கம்மியாக குடிக்கும் போது பீர் ஆரோக்கியத்திற்கு உதவும்.

3 /7

சில வகையான பீர்களை குடிப்பது இதய நோய் அபாயத்தைக் குறைக்கும் என்று கூறப்படுகிறது. பீர் குடிக்காதவர்களுடன் ஒப்பிடும்போது பீர் குடிப்பவர்களுக்கு இதய நோய்க்கான ஆபத்து 42 சதவீதம் குறைவாக இருப்பதாக அறியப்படுகிறது.

4 /7

இரத்த சர்க்கரை ஒரு பொதுவான உடல்நலப் பிரச்சினையாகும். குறைவான அளவு பீர் உட்கொள்வது நீரிழிவு நோய்க்கான ஆபத்து காரணியான இன்சுலின் எதிர்ப்பை குறைக்கிறது.

5 /7

குறைவான அளவு பீர் சாப்பிடுபவர்கள் இறப்பதற்கான வாய்ப்பு 19 சதவீதம் குறைவாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

6 /7

பீர் குடித்தால் எலும்பின் அடர்த்தி அதிகரிப்பதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் இது ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்கும்.  

7 /7

மிதமான அளவில் பீர் குடிப்பது சிறுநீர் பாதை அமைப்பில் அதிகப்படியான கால்சியம் படிவுகளைத் தடுக்க உதவுகிறது. இது சிறுநீரக கற்களை வலியின்றி வெளியேற்றுகிறது.