வீட்டு தெய்வத்தை முறையாக வணங்கினால் அருளாசி நிச்சயம்! முறையான வழிபாட்டு முறைகள்!

House Pooja Room Rituals : ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது பெரியோர் வாக்கு. அது உண்மையானது தான் என்றாலும், வீட்டில் இருக்கும் தெய்வத்தை வணங்காமல் கோவிலுக்கு சென்றால் புண்ணியம் கிடைக்குமா?

தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள், வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக, கோவில் கோவிலாக செல்வதைப் பார்க்கிறோம். ஆனால், முதலில் வீட்டில் உள்ள பூஜையறையில் தெய்வத்தை முறையாக வணங்கினால் தான் பலன் கிடைக்கும்....

1 /8

அனைவரின் வீட்டிலும் பூஜை அறை இருந்தாலும், இல்லாவிட்டாலும், கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் வீட்டில் தெய்வத்தை வணங்குவது தொடர்பான பயனுள்ள குறிப்புகளை பார்க்கலாம்

2 /8

பூஜை அறை கடவுள் வாசம் செய்யும் இடமாக உள்ளதால் எப்போதும் சுத்தமாக இருத்தல் அவசியம்.

3 /8

கடவுளின் படங்கள், சிலைகள் முதலியவை முறையாக அடுக்கி வைக்க வேண்டும்.

4 /8

காலை,மாலை நேரத்தில் வீட்டின் பூஜை அறையில் விளக்கு ஏற்றுவது சிறந்தது.

5 /8

சுவாமி படத்தில் உள்ள கண்ணாடி உடைந்துவிட்டால், உடனே அப்புறப்படுத்திவிட வேண்டும். பின்னமானவற்றை வீட்டில் வைத்து வணங்கக்கூடாது

6 /8

முழு முதல் கடவுளான விநாயகரின் படம் வீட்டில் இருப்பது அவசியம்

7 /8

தட்சிணாமூர்த்தி மற்றும் நடராஜரின் படங்களை தெற்கு நோக்கி வைக்க வேண்டும்.

8 /8

தெற்கு நோக்கி விளக்கை ஏற்றக் கூடாது. அது எமனுக்கு உரிய திசை ஆகும். அதேபோல, கடவுளுக்கு வீட்டில் சமைக்கும் உணவை நிவேதனம் செய்ய வேண்டும்