Bad Effects Of Maida : மைதா என்பது, கோதுமையை சுத்திகரிக்கும்போது கிடைக்கும் இறுதிப் பொருள், இதனைக் கழிவு என்றே சொல்லலாம். கோதுமையில் இருந்து மாவு பிரித்து பதப்படுத்தும்போது நார்ச்சத்து மற்றும் சத்துக்கள் கழிந்த பிறகு கிடைப்பது மைதா...
அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் எதுவுமே இல்லாத மைதா, பல பிரபலமான உணவுகளின் அடிப்படையாக உள்ளது. இது ஆரோக்கியத்திற்கு மிகவும் அச்சுறுத்தல் விளைவிக்கும். எனவே முடிந்த அளவு, மைதாவால் செய்யப்பட்ட உணவுகளை தவிர்க்கவும்...
கோதுமையில் இருந்து கோதுமை மாவு தயாரிக்கும் போது, தானியத்தின் மேல் உள்ள தவிடு அகற்றப்படாமல், உடலுக்கு நார்சத்தை கொடுப்பதால் அது நல்லது. ஆனால், நார்ச்சத்து முழுமையாக அகற்றப்பட்ட நிலையில் கிடைப்பது மைதா
மைதா மாவு தயாரிப்பில், வழக்கமாக மாவில் உள்ள அனைத்து புரதங்களும், நார்ச்சத்துக்களும் அழிக்கப்படுவதால், இது அமிலமாக செயல்பட்டு, எலும்புகளில் இருந்து கால்சியத்தை உறுஞ்சி எலும்புகளை பலவீனப்படுத்துகிறது.
ஆனால், சக்கையான மைதாவில் இருந்து தயாரிக்கப்படும் பூரி, பரோட்டா ஆகியவை அனைவராலும் விரும்பி உண்ணக்கூடிய பொருட்களாக விற்பனையில் சக்கை போடு போடுகின்றன. மைதாவை அளவுக்கு அதிகமாக உண்டால், உடல் நலம் மிகவும் மோசமாக பாதிக்கப்படும்
நார்ச்சத்து இல்லாத மைதாவால் செய்யப்பட்ட உணவுகள், குடலில் ஒட்டிக் கொள்வதால், செரிமான பிரச்சனைகள் ஏற்படுகிறது
மைதாவில் அதிக அளவு மாவு சத்து உள்ளது, எனவே மைதாவால் செய்யப்பட்ட உணவுகளை உண்பதால் உடல் எடை அதிகரிக்கும்
நாம் பசை தயாரிக்க மைதாவை பயன்படுத்துகிறோம். உண்மையில் அதிக பசைத்தன்மைக் கொண்ட மைதாவை அதிகமாக உட்கொள்ளும்போது, அது, குடலில் பசையாய் ஒட்டிக் கொண்டு குடல் ஆரோக்கியத்தை சீர்குலைக்கிறது.
நல்ல சத்துக்கள் எதுவும் இல்லாத மைதாவை சாப்பிடுவதால் எந்த நன்மையும் இல்லை என்பது ஒருபுறம் என்றால், அதனால் ஏற்படும் பக்க விளைவுகளும் அதிகம். மைதாவை அதிகமாக உட்கொண்டால், நோயெதிர்ப்பு சக்தியைக் குறைக்கும், ஏனென்றால், உடலில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் பற்றாக்குறை ஏற்படும்
கெட்ட கொலஸ்ட்ரால் அல்லது எல்டிஎல் அளவை தூண்டி நல்ல கொலஸ்ட்ரால் அல்லது எச்டிஎல் அளவைக் குறைக்கும் வேலையை மைதா செய்யும் என்பதால், அதிக அளவில் மைதா உணவுகளை உண்பதால், பக்கவாதம், மாரடைப்பு, தமனி நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.
அளவுக்கு அதிகமாக மைதா மாவால் செய்யப்பட்ட உணவுகளை உண்பதால், இரத்தத்தில் சர்க்கரை அளவை துரிதமாக அதிகரிக்கிறது. இதன் காரணமாக இரத்தத்தில் குளுக்கோஸ் சேரத் தொடங்கி நீரிழிவு நோய் பிரச்சனை அதிகரிக்கும்