ஒரு மாதம் டீ குடிக்காமல் இருந்தால் உடலில் என்ன என்ன மாற்றங்கள் நிகழும்?

Tea Side Effects: தினசரி டீ குடிப்பதால் உடலில் எந்த ஒரு தீங்கும் ஏற்படாது.  ஆனால் அதிகப்படியாக டீ குடிப்பதால் அது நம் ஆரோக்கியத்தை பாதிக்க வாய்ப்புள்ளது. 

 

1 /5

டீ நம்மில் பலருக்கு டீ என்பது காலையில் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஒரு நாளுக்கு தேவையான ஆற்றலை டீ தருகிறது.  தினமும் டீ குடிப்பதால் எந்தத் தீங்கும் இல்லை. ஆனால் 30 நாட்கள் டீ குடிப்பதை நிறுத்தினால் உடலில் என்ன மாற்றங்கள் நிகழும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.  

2 /5

பதட்டத்தை குறைக்கிறது நீங்கள் எப்போதும் கவலையாக உணர்கிறீர்கள் என்றால், அதற்கு டீ காரணமாக இருக்கலாம். இவை அதிக பதட்டம், இதயத் துடிப்பு மற்றும் பீதியை ஏற்படுத்துகிறது.  ஏற்கனவே கவலை மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டீ குடிப்பது மேலும் இந்த பிரச்சனையை அதிகப்படுத்தும். 

3 /5

தூக்கம் அதிக டீ குடிக்கும் பழக்கம் உங்களது தூக்கத்தில் மாற்றத்தை விளைவிக்கும். தினசரி நீங்கள் 2-3 கப் டீ குடித்தால் உங்களின் தூக்கத்தை கடுமையாக பாதிக்கும். டீ குடிக்காமல் இருப்பது நல்ல தூக்கத்திற்கு உதவும்.  

4 /5

குறைந்த இரத்த அழுத்தம் டீ குடிப்பதை நிறுத்துவது இரத்த அழுத்தத்தை சீராக்க உதவும். டீ குடிப்பது நரம்பு மண்டலத்தில் உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. கர்ப்பிணிப் பெண்கள் அல்லது பாலூட்டும் தாய்மார்கள் டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும்.    

5 /5

மாற்று உணவு டீ குடிப்பதை முற்றிலுமாக கைவிட பெப்பர்மின்ட் டீ, கெமோமில் டீ, இஞ்சி டீ, ஆப்பிள் டீ, குருதிநெல்லி டீ, தேன் இலவங்கப்பட்டை மற்றும் எலுமிச்சை தண்ணீர் போன்ற ஆரோக்கியமான டீயை முயற்சி செய்யலாம்.