மூட்டு வலி இருந்தால் இந்த உணவுகள் உங்களுக்கு எதிரி! புரத உணவுகளை குறைக்கவும்

Gout vs Protein: நாம் உண்ணும் உணவே நமது உடல் ஆரோக்கியத்தை தீர்மானிக்கும், எல்லா உணவுகளுமே ஏதோ ஒரு விதத்தில், நமது உடல்நலனை மேம்படுத்தும் அல்லது பாதிக்கும். எனவே, நமது உடல்வாகு மற்றும் ஆரோக்கியத்தைப் பொறுத்தே உணவுகளை உண்ண வேண்டும்

புரத சத்துள்ள உணவுகள் உடலுக்கு மிகவும் அவசியமானவை என்றாலும், கீல்வாதம், யூரிக் அமிலம் அதிகமாக உள்ளவர்கள் இவற்ற்றை அதிகமாக உண்ணக்கூடாது  

1 /11

உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் போது மூட்டு, மூட்டுகளில் வீக்கம் என பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். அப்போது, மருத்துவரிடம் சென்று வைத்தியம் பார்ப்பது ஒருபுறம் என்றாலும், சில உணவுகளை தவிர்ப்பது நல்லது. புரதச்சத்து அதிகமானால், யூரிக் அமிலம் அதிகம் இருப்பவர்களின் பிரச்சனை தீராது. எனவே, சில உணவுகளை, தினசரி உணவில் இருந்து குறைத்துக் கொள்ள வேண்டும்

2 /11

வேர்க்கடலையில் புரதம் அதிகம் உள்ளது

3 /11

புரதத்தின் அருமையான மூலம், கொண்டைக்கடலை. எனவே, யூர்க் ஆசிட் பிரச்சனை உள்ளவர்கள் இதனை உணவில் குறைத்துக் கொள்ளவும்

4 /11

புரதம் அதிகமுள்ள சோயாபீன்

5 /11

புரதம் மற்றும் கால்சியம் அதிகமுள்ள பனீர் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும்

6 /11

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால், பூசணி விதைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்

7 /11

உணவுகளில் பல்வேறு சத்துக்கள் இருப்பதால், எதையுமே தவிர்க்கக்கூடாது என்றாலும் யூரிக் அமிலம் இருப்பவர்கள் புரதச்சத்து உணவை குறைத்துக் கொள்ளவேண்டும்

8 /11

புரதத்தின் மூலங்கள் இவை, ஆனால் யூரிக் ஆசிடை அதிகரித்துவிடும்

9 /11

முட்டையின் மஞ்சள் கருவை யூரிக் அமிலம் அதிகம் உள்ளவர்கள் தவிர்க்கவும்

10 /11

பாதாம் ஒரு அற்புதமான கொட்டை வகை புரதம், எனவே யூரிக் அமிலம் இருப்பவர்கள், இதனை உண்பதை குறைத்துக் கொள்ளவும்

11 /11

தயிர் உடலுக்கு நல்லது, ஆனால், பதப்படுத்தப்பட்ட தயிரை யூரிக் அமில பிரச்சனை உள்ளவர்கள் முற்றிலுமாக தவிர்க்கவும்