வெயில் காலத்தில் இந்த மசாலாப் பொருட்கள் சேர்ப்பதை தவிருங்கள்..!

கோடைக்காலத்தில் நமது உடல் அதிகம் சூடாகிறது.  எனவே நாம் சாப்பிடும் உணவை பார்த்து பார்த்து சாப்பிட வேண்டும்.  இல்லை என்றால் பல வித பிரச்சனைகள் ஏற்படலாம்.

 

1 /5

கோடை காலத்தில் உடல் நேரேற்றமாக இருக்க வேண்டியது அவசியம். இதனால் பலரும் பழங்கள் மற்றும் காய்கறிகளை விரும்பி சாப்பிடுகின்றனர்.  ஆனால் உணவில் பயன்படுத்தப்படும் சில மசாலா பொருட்களை இந்த கோடைகாலத்தில் தவிர்ப்பது நல்லது.    

2 /5

கிராம்பு: கிராம்பு உடலுக்கு நல்லது என்றாலும் அதிகம் பயன்படுத்த கூடாது. குறிப்பாக கோடை காலத்தில் மிகவும் கவனமாக சாப்பிட வேண்டும். ஏனெனில் இவை சில பக்க விளைவுகளை ஏற்படுத்த கூடும்.

3 /5

பூண்டு: உணவில் பூண்டு சேர்த்துக்கொண்டால் உணவின் சுவையை அதிகரிக்கும். பூண்டு வெங்காய இனத் தாவரத்தை சேர்ந்தவை. வெயில் காலத்தில் பூண்டு அதிகம் சேர்த்து கொண்டா உடல் சூட்டை அதிகரிக்கும்.   

4 /5

மிளகாய்: மிளகாய் பயன்படுத்தாமல் எந்த உணவுகளையும் ருசியாக சமைக்க முடியாது. மிளகாய் கேப்சிகம் இனத்தைச் சேர்ந்த தாவரங்களின் பெர்ரி-பழத்தின் வகைகள் ஆகும். வெளில்காலத்தில் மிளகாயை அதிகம் சாப்பிட்டால் உடலில் எரிச்சலை ஏற்படுத்தும்.  

5 /5

இஞ்சி: இஞ்சி பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.  இஞ்சி சாப்பிடுவது மலச்சிக்கல் மற்றும் வீக்கம் போன்றவற்றை குறைக்கும்.  ஆனால் அதிக அளவு இஞ்சியை சாப்பிடுவது தீங்கு விளைவிக்கும். இது உடலை சூடாக்கும்.