டெல்லிக்கு எதிராக மிகப்பெரிய வெற்றி பெற்ற கேகேஆர்! ஐபிஎல் புள்ளிப் பட்டியல்

விசாகப்பட்டனத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2024 லீக் போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

ஐபிஎல் 2024 தொடரில் பேட்டிங்கிற்கு சொர்க்கபூமியாக மாறியிருக்கிற விசாகப்பட்டனத்தில் கேகேஆர், டெல்லி போட்டி நடந்தது. டாஸ் வெற்றி பெற்றதும் கேகேஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் பேட்டிங் எடுப்பதாக அறிவித்தார். இதன்படி களமிறங்கி அதிரடியாக ரன்களை சேர்த்த அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 271 ரன்களை குவித்தனர். 

 

1 /5

ஓப்பனிங் இறங்கிய சால்ட் மட்டும் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் மறுமுனையில் சூறாவளியாய் சுழன்றடித்துக் கொண்டிருந்தார் சுனில் நரைன். அவருக்கு பக்கபலமாக ரகுவன்ஷியும் அதிரடியாக விளையாட கேகேஆர் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. பவர்பிளேயில் கேகேஆர் ஒரு விக்கெட் இழந்து 88 ரன்கள் எடுத்திருந்தது. முதல் ஓவரில் ஆரம்பித்த கேகேஆர் அணியின் பேட்டிங் சுனாமி 20வது ஓவர் வரை தொடர்ந்தது. சுனில் நரைன் 39 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து நரைன் ஆட்டமிழந்தார். இதில், 7 சிக்ஸ் மற்றும் 7 பவுண்டரி அடங்கும்.   

2 /5

இதேபோல், 18 வயதே ஆன அறிமுக வீரர் ரகுவன்ஷி தன் பங்கிற்கு 5 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 25 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அறிமுக போட்டியிலேயே அரைசதம் அடித்தவர்களின் பட்டியலில் இடம் பிடித்தார். முடிவில், 27 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 2 சிக்ஸ் உள்பட 18 ரன்களில் ஆட்டமிழக்க, ரிங்கு சிங் 3 சிக்ஸர், ஒரு பவுண்டரி உள்பட 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பிறகு, ஆண்ட்ரே ரஸல் 3 சிக்ஸ், 4 பவுண்டரி உள்பட 41 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி ஓவரில் அவுட்டானார்.   

3 /5

இஷாந்த் சர்மா அற்புதமாக வீசிய யார்க்கர் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். முடிவில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் குவித்தது. ஐபிஎல் ஹிஸ்டிரில் ஒரு அணி எடுத்த இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராக பதிவானது. நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 277 ரன்கள் சன்ரைசர்ஸ் அணி எடுத்ததே ஐபிஎல் தொடரில் ஒரு அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோராக உள்ளது.  

4 /5

இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 17.2 ஓவரில் 166 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் கொல்கத்தா அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. டெல்லி அணியில் அதிகபட்சமாக ரிஷப் பன்ட் 25 பந்துகளில் 55 ரன்களும், ஸ்டப்ஸ் 54 ரன்களும் எடுத்தனர்.  

5 /5

இந்தப் போட்டிக்குப் பிறகு மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது. 2வது இடத்தில் ராஜஸ்தான் அணியும், மூன்றாவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் உள்ளன. டெல்லி கேப்பிட்டல்ஸ் 3வது தோல்வியை சந்தித்து 9வது இடத்துக்கு சென்றது.