உடலின் ரத்த நாளங்களில் கெட்ட கொலஸ்ட்ரால்கள் சேருவது பல நோய்களுக்கு வழிவகுக்கும். எனவே, சில குறிப்பிட்ட உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் இருப்பதன்மூலம், கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் சேருவதை நீங்கள் தவிர்க்கலாம்.
ரத்த நாளங்களில் சேரும் கெட்ட கொலஸ்ட்ரால் நமது ஆரோக்கியத்தின் மிகப்பெரிய எதிரி, அது உடல் பருமனை அதிகரிக்கிறது. பின்னர் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு உள்ளிட்ட நோய்களுக்கு வழிவகுக்கும். இது உடல்நலனுக்கு ஆபத்தை உருவாகத் தொடங்கும்.
அதனால்தான் நாம் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. நமது அன்றாட உணவுப் பழக்கங்களில் மாற்றங்களைக் கொண்டுவருவது மிகவும் முக்கியம்.
இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வாட்ஸ் கூறுகையில், ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க வேண்டுமானால், சில உணவுகளில் இருந்து விலகி இருப்பதுதான் புத்திசாலித்தனமானது என்கிறார்.
1. பால்: பால் என்பது நமக்கு ஒரு முழுமையான உணவு என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் முழு கொழுப்புள்ள பால் பொருட்களை சாப்பிடுவது கொலஸ்ட்ராலை அதிகரிக்கும். இது அதிக கொழுப்புள்ள பால், கிரீம் தவிர தயிரையும் உங்கள் உணவில் இருந்து தள்ளிவையுங்கள். பாலாடைக்கட்டியில் நிறைவுற்ற கொழுப்பு மற்றும் சோடியம் அதிகமாக உள்ளது. எனவே அதை அதிகமாக சாப்பிட வேண்டாம்.
2. இறைச்சி: சிவப்பு இறைச்சி பொதுவாக புரதத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய உட்கொள்ளப்படுகிறது, ஆனால் அதில் கொழுப்பின் அளவு மிக அதிகமாக உள்ளது. இதனுடன், சிவப்பு இறைச்சியை சமைக்க நிறைய எண்ணெய் மற்றும் மசாலாப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன, இது கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது.
3. வறுத்த உணவுகள்: இந்திய மக்கள் வறுத்த உணவுகளை மிகவும் விரும்புகிறார்கள், ஆனால் அவர்களின் விருப்பம் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும். குறிப்பாக சந்தையில் கிடைக்கும் எண்ணெயில் பொரித்த உணவுகள் ஆரோக்கியத்தைக் கெடுக்கும். பிரஞ்ச் பிரைஸ் மற்றும் பொரித்த சிக்கன் போன்றவற்றை தவிர்க்கவும்.
4. சர்க்கரை: சர்க்கரையின் சுவையும், அதில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களும் நம்மை வெகுவாகக் கவர்ந்தாலும், அது நமது ஆரோக்கியத்திற்குப் பெரிய எதிரி. குறைந்த அளவிலான இனிப்புகளை சாப்பிட வேண்டும். அவற்றை நிறைய சாப்பிட்டால், அவை கொலஸ்ட்ராலை அதிகரிப்பது மட்டுமல்லாமல், இரத்த சர்க்கரை அளவையும் அதிகரிக்கலாம்.