Public Provident Fund: நிலையான வருமானத்தை பெற விரும்பும் முதலீட்டாளர்கள் தபால் நிலைய திட்டங்களில் பொது வருங்கால வைப்பு நிதி அதாவது PPF -ஐ தேர்வு செய்யலாம். இந்தத் திட்டம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சியடைகிறது.
Public Provident Fund: பிபிஎஃப் திட்டத்தை 5 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும். PPF இல் ஆண்டுக்கு அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் முதலீடு செய்யலாம். இந்தத் தொகையை நீண்ட காலத்திற்குத் தொடர்ந்து டெபாசிட் செய்தால், தபால் அலுவலகத்தின் இந்தத் திட்டத்தின் மூலம் மிக எளிதாக கோடீஸ்வரராக்கலாம்.
நல்ல வட்டி, வரி இல்லாத முதலீடு, முதிர்ச்சியின் போது கிடைக்கும் தொகை என பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) திட்டத்தில் பல வித நன்மைகள் உள்ளன. அனைத்து வகைகளிலும் இது ஒரு மிக நல்ல திட்டமாக உள்ளது. இந்த திட்டத்தின் முதிர்ச்சி காலம் 15 ஆண்டுகள் ஆகும். ஆனால், 15 ஆண்டுகளுக்குப் பிறகும், இதில் பல நன்மைகள் கிடைக்கின்றன.
பிபிஎஃப் -இல் கிடைக்கும் தனிச்சிறப்பு வாய்ந்த சில நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம். இதன் பிறகு இதில் முதலீடு செய்வதற்கான உறுதி இன்னும் அதிகமாகும்.
இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், இந்த திட்டம் மெச்யூர் அதாவது முதிர்ச்சியடைந்த பிறகும் அதில் பணத்தை முதலீடு செய்தாலும் இல்லாவிட்டாலும், வட்டி தொடர்ந்து கிடைக்கும். உங்கள் PPF கணக்கின் முதிர்வுக்கு பிறகு உங்கள் முன் 3 விருப்பங்கள் இருக்கும். இந்த விருப்பங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து நீங்கள் உங்கள் தொகையை மேலும் அதிகரிக்கலாம்.
பிபிஎஃப் கணக்கு (PPF Account) முதிர்ச்சியடையும் போது, முதலீட்டாளர் அதில் டெபாசிட் செய்த தொகையையும், அதற்குப் பெற்ற வட்டியையும் எடுக்கலாம். இது இதில் கிடைக்கும் ஒரு விருப்பம். கணக்கு மூடப்படும்போது, முதலீட்டாளரின் முழுத் தொகையும் அவரது கணக்கிற்கு மாற்றப்படும். முதிர்ச்சியின் போது பெறப்படும் பணம் மற்றும் வட்டிக்கு முற்றிலும் வரி விலக்கு அளிக்கப்படும் என்பது சிறப்பம்சம்.
இரண்டாவது நன்மை அல்லது விருப்பம் என்னவென்றால், முதிர்ச்சியின் போது உங்கள் கணக்கை மேலும் நீட்டிக்கலாம். 5 ஆண்டு காலத்திற்கு கணக்கை நீட்டிக்கலாம். ஆனால், PPF கணக்கு முதிர்ச்சியடைவதற்கு 1 வருடத்திற்கு முன்பே நீங்கள் நீட்டிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்வது நல்லது. இருப்பினும், கணக்கை நீட்டிக்கும்போதும் பணத்தை எடுக்கலாம். அப்படி செய்யும்போது ப்ரீ-மெச்யூர் வித்ட்ராயலின் விதிகள் இதில் பொருந்தாது.
PPF கணக்கின் மூன்றாவது பெரிய நன்மை என்னவென்றால், மேலே உள்ள இரண்டு விருப்பங்களை நீங்கள் தேர்வு செய்யாவிட்டாலும், உங்கள் கணக்கு முதிர்ச்சியடைந்த பிறகும் தொடர்ந்து செயல்படும். இதில் முதலீடு செய்ய வேண்டிய அவசியமில்லை. முதிர்வு தானாகவே 5 ஆண்டுகள் நீட்டிக்கப்படும். நல்ல விஷயம் இதில் தொடர்ந்து வட்டி கிடைக்கும்.
PPF கணக்கை அரசு அல்லது தனியார் வங்கிகளில் தொடங்கலாம். மேலும், உங்கள் தபால் நிலையங்களிலும் கணக்கைத் திறக்கலாம். மைனர்களும் கணக்கைத் திறக்கலாம், ஆனால் அவர்களுக்கு 18 வயது ஆகும் வரை பெற்றோர் இதற்கு பொறுப்பாக இருப்பார்கள். இருப்பினும், நிதி அமைச்சக விதிகளின்படி, இந்து பிரிக்கப்படாத குடும்பம் (HUF) PPF கணக்கைத் திறக்க முடியாது.
தற்போது பொது வருங்கால வைப்பு நிதியில் 7.1 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி விகிதத்தில் 15 அல்லது 20 ஆண்டுகள் முதலீடு செய்தால், ஒரு பெரிய நிதியை உருவாக்கலாம். தற்போது, PPF கணக்கில் 7.1% ஆண்டு வட்டி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.1,000 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.3 லட்சத்து 18 ஆயிரம் கிடைக்கும்.