அபரிமிதமான ஆரோக்கிய நன்மைகளை கொண்ட கிவி பழம்

சில பழங்கள் ஆண்டு முழுவதும் நமக்கு கிடைத்தாலும், சில பழங்கள் ஆண்டின் சில குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே நமக்கு கிடைக்கின்றன. இந்த பதிவில், நாம் கிவி பழங்களின் நன்மைகளைப் பற்றி பார்க்கவுள்ளோம். கிவி பழம் ஆண்டு முழுவதும் கிடைக்கும் ஒரு பழமாகும். எந்த பருவத்திலும் கிவி பழத்தை சாப்பிடலாம். 

1 /4

கிவி பழத்தை சாப்பிடுவது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது. இதனால் உடலில் நோய்களை எதிர்த்துப் போராடும் திறன் வளர்கிறது. கொரோனா போன்ற வைரஸ் தொற்றை தவிர்க்க உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்க வேண்டியது மிக அவசியமாகும். ஆகையால், நமது அன்றாட உணவில் கிவி பழத்தை உட்கொள்வது மிக நல்லது. கிவி பழம் சாப்பிடுவதற்கும் மிகவும் சுவையாக இருக்கும். 

2 /4

இதய நோய், இரத்த அழுத்த பிரச்சனை மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு கிவி மிகவும் நன்மை பயக்கும். கிவி சாப்பிடுவது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. கிவி சாப்பிடுவதால், சருமம் பளபளப்பாகும், சுருக்கங்கள் நீங்கும். வயிற்றில் ஏற்படும் உஷ்ணம் மற்றும் அல்சர் போன்ற நோய்களை நீக்குவதில் கிவி மிகவும் பயனுள்ள பழமாக கருதப்படுகிறது.

3 /4

கிவியில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளது. இதன் காரணமாக கர்ப்பிணிப் பெண்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். கிவி சாப்பிடுவது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. தினமும் கிவி சாப்பிடுவதால் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு குறைகிறது. மூட்டு வலி, எலும்பு வலியைப் போக்கவும் கிவி உதவுகிறது. கிவி மன அழுத்தத்தையும், பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்று பாதிப்பையும் குணமாக்குகிறது. 

4 /4

கிவியில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. கிவியில் கலோரிகள் மிகக் குறைவாக இருப்பதால், உடற்தகுதியை கவனித்துக்கொள்பவர்கள் கிவியை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். வாழைப்பழத்தை விட கிவியில் அதிக பொட்டாசியம் மற்றும் பாதி கலோரிகள் உள்ளன. கிவியில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. ஆரஞ்சு பழத்தை விட இரண்டு மடங்கு வைட்டமின் சி இதில் உள்ளது. கிவியில் நார்ச்சத்து இருப்பதால் செரிமான சக்தியை இது அதிகரிக்கிறது.