இளநீர் நன்மைகள்: கோடை காலத்தில், சுட்டெரிக்கும் வெயில் நம்மை பாடாய் படுத்துகிறது. வெயில் காலத்தில் உடலின் ஆற்றலும் குறைந்து நாம் அடிக்கடி பலவீனமாய் உணர்வது உண்டு. வெயிலால் ஏற்படும் பலவீனத்தை சரிச்செய்ய நாம் கோடை காலத்துக்கு ஏற்ற உணவுகளையும் பானங்களையும் உண்ண வேண்டியது அவசியமாகும். இளநீர் கோடையில் மிகுந்த நிவாரணம் அளிக்கும் ஒரு பானமாக கருதப்படுகின்றது. தேங்காய்க்குள் இருக்கும் இளநீரின் சுவையும் அற்புதமாக இருக்கும். இளநீர் மிகவும் சத்தான பானமாகும்.
அதிகரித்து வரும் வெப்பத்தின் காரணமாக, உடலில் உள்ள ஆற்றல் அளவு குறைகிறது. இளநீர் உடலின் ஆற்றலை அதிகரிப்பதில் நன்மை பயக்கும். இதனுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் இளநீர் அதிகரிக்கிறது.
இளநீர் உடலில் உள்ள சர்க்கரையை கட்டுக்குள் வைக்கிறது. இன்சுலின் பற்றாக்குறையால் நீரிழிவு பிரச்சனை ஏற்படுகிறது. இளநீர் இன்சுலின் அளவை அதிகரிக்கிறது.
சிறுநீரக கோளாறு போன்ற நோய்களுக்கு இளநீர் அதிக நன்மை பயக்கும். இதன் நுகர்வு கற்களின் படிகங்களைக் குறைக்கிறது. இளநீர் கற்களை கரைத்து சிறுநீரகத்திலிருந்து கற்களை சிறுநீர் மூலம் அகற்றும் பணியையும் செய்கிறது.
சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். இதற்கு இளநீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இளநீர் குடிப்பதாலும், இளநீர் கொண்டு முகத்தை கழுவுவதாலும் முகத்தில் ஏற்படும் பருக்கள், தழும்புகள் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் பெறலாம். (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவ. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)