மழைக்காலத்தில் காய்ச்சல், சளி போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது சகஜம் என்றாலும் அதனுடன் மேற்கொண்டும் சில பிரச்சனைகள் ஏற்படுகின்றது.
மழைக்காலத்தில் ஜலதோஷம், மலேரியா, டெங்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கமான ஒன்று. இவை அனைத்தும் சுகாதார பிரச்சனைகளால் ஏற்படுகின்றன.
மேலும் மோசமான உணவுகள் காரணமாகவும் சில பிரச்சனைகள் உடலில் ஏற்படுகிறது. மேலும் சில கண் நோய்த்தொற்றுகளும் மழைக்காலங்களில் ஏற்படுகின்றது.
கண் நோய் தொற்றுகள் அதிகம் ஏற்பட்டு கண் சிவத்தல், கண் எரியும் தன்மை, கண்களில் வீக்கம், தண்ணீர் வருதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது.
மழைக்காலங்களில் வறண்ட கண்கள் பிரச்சனை பலருக்கும் ஏற்படுகிறது. கண்களால் திரவத்தை உற்பத்தி செய்ய முடியாத போது இந்த பிரச்சனை ஏற்படுகிறது. நீண்ட நேரம் மொபைல் பார்க்கும் போது இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
மழைக்காலத்தில் ஒரு சிலருக்கு கண்களில் கட்டி ஏற்படலாம். இது ஒரு வகையான பாக்டீரியா தொற்று ஆகும். முதலில் அரிப்பு ஏற்பட்டு பிறகு கட்டியாக மாறுகிறது.
மழைக்காலங்களில் கண் குருட்டுத்தன்மை பலருக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது. உலகம் முழுவதும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.