ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை... 80 நிமிடத்தில் அயோத்தியா பயணம்..!

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில்  ஏர் இந்தியாவின் துணை விமான நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ராமர் பக்தர்களுக்காக புதிய சேவையை அறிவித்துள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் டெல்லி - அயோத்தி இடையே விமானங்களை இயக்க உள்ளது. 

விமான நிலையம் திறக்கப்பட்ட உடனேயே அயோத்தியில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சேவையை தொடங்குவதில் உற்சாகமாக இருப்பதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் கூறியுள்ளது.

1 /7

அயோத்தி செல்லும் பயணிகள் டிசம்பர் 30 முதல் இந்த வசதியைப் பெறலாம். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வாடிக்கையாளர்கள் ஜனவரி 16 முதல் ஒவ்வொரு நாளும் தேசிய தலைநகரில் இருந்து ஸ்ரீ ராம ஜென்ம பூமியான அயோத்தியாவிற்கு பயணம் செய்யலாம்.

2 /7

டிசம்பர் 30 ஆம் தேதி, தேசிய தலைநகரில் இருந்து அயோத்திக்கு விமானங்கள் அறிவிக்கப்பட்டதாகவும், ஜனவரி 16 முதல் இந்த வழித்தடத்தில் தினசரி சேவை தொடங்கப்படும் என்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. 

3 /7

 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், IX 2789 விமானம் டிசம்பர் 30 ஆம் தேதி காலை 11:00 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்டு மதியம் 12:20 மணிக்கு அயோத்தியில் தரையிறங்கும். அயோத்தியில் இருந்து IX 1769 மதியம் 12:50 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்டு 14:10 மணிக்கு சென்றடையும். 

4 /7

விமான நிலையம் திறக்கப்பட்ட உடனேயே அயோத்தியில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சேவையை தொடங்க உற்சாகமாக இருப்பதாக ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் எம்டி அலோக் சிங் தெரிவித்தார். இது நாட்டின் அடுக்கு 2 மற்றும் அடுக்கு 3 நகரங்களுடனான தொடர்பை அதிகரிக்க உதவும்.

5 /7

சில நாட்களுக்கு முன்பு இண்டிகோ நிறுவனமும் அயோத்திக்கு விமான சேவையை அறிவித்தது. இண்டிகோ விமானம் டில்லியில் இருந்து அயோத்திக்கான தனது முதல்  விமான சேவையை  டிசம்பர் 30ம் தேதி தொடங்குகிறது. ஜனவரி 6 முதல் தினசரி விமான சேவைகள் தொடங்கப்படும் என்று இண்டிகோ தெரிவித்துள்ளது. டெல்லி, அகமதாபாத் மற்றும் அயோத்தி இடையே இந்த சேவை தொடங்கும்.

6 /7

சுமார் 350 கோடி ரூபாய் செலவில் இந்திய விமான நிலைய ஆணையத்தால் (AAI) உருவாக்கப்பட்டுள்ள, வரவிருக்கும் அயோத்தி விமான நிலையத்திற்கான ஏரோட்ரோம் உரிமத்தை டிசம்பர் 14 அன்று, விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் DGCA வழங்கியது என்பதைத் தெரிவிக்கிறோம்.

7 /7

ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான  ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தினமும் 300க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.  நிறுவனத்திற்கு சொந்தமாக 59 விமானங்கள் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.