ஆடி அமாவசையில் பித்ருகளுக்கு தர்ப்பணம் செய்யாவிட்டால் என்ன ஆகும்? பித்ரு கடன் தீர்க்கும் வழி...

Adi Amavasya 2024 : தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் ஆடி அமாவாசை பித்ரு தர்ப்பணத்துக்கு மிகவும் விசேஷமான நாள். இன்று இறந்து போனவர்களுக்கு செய்ய வேண்டிய காரியங்களை செய்வது குடும்பத்தில் நிம்மதியைக் கொண்டு வந்து சேர்க்கும்...

அமாவாசை நாள், ஆன்மீகத்தில் மிகவும் முக்கியமானது. சந்திரன் முழுமையாக தேய்ந்து போய் வானில் தோன்றாத நாளான அமாவசையன்று, முறையாக பித்ருக்களை வழிபடவேண்டும். அவர்களை திருப்திபடுத்தாவிட்டால், அது வாழ்க்கையில் துயரங்களை கொண்டு வரும் 

1 /8

இந்த ஆண்டு வானில் சந்திரன் முழுவதுமாக தேய்ந்து போகும் ஆகஸ்ட் மாதம் நான்காம் நாளன்று ஆடி அமாவாசை உருவாகிறது. 

2 /8

ஆடி மாதம் பல விதங்களில் முக்கியமான மாதம் ஆகும். சூரியன் தனது சுழற்சியை மாற்றும் மாதம் ஆடியில், தட்சிணாயன புண்ணியகாலம் தொடங்குகிற்து. விஷ்ணு யோக நித்திரைக்கு செல்லும் மாதம் இது. இந்த மாதம் அம்மன் வழிபாடு மிகவும் சிறப்பானது

3 /8

ஆடி மாதத்தில் அன்னை வழிபாடு மிகவும் முக்கியமானது. உலகின் சக்திகள் அனைத்துமே அன்னை பார்வதியிடம் ஐக்கியமாகிவிடுகிறது என்பது ஐதீகம், இந்த ஆடி மாதத்தில் பெண் தெய்வ வழிபாடு சிறப்பானது

4 /8

ஆடியில் சிவன் வழிபாடு மிகவும் சிறப்பானது. காக்கும் கடவுள் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், அவரின் பணியையும் சேர்த்து பார்க்கிறார் சிவன் என்பது தொன்மமான நம்பிக்கை. அதிலும் வட இந்தியாவில் நதிக்கரைகளில் சிவன் வழிபாடு கோலாகலமாக இருக்கும்

5 /8

காக்கும் கடவுள் சிவன், அழிக்கும் தொழிலுக்கு அதிபதி என்பது நம்பிக்கை. அவர், தற்போது ஆடி மாதத்தில் காக்கும் தொழிலையும் செய்யும்போது, இறந்துபோன் பித்ருக்களுக்கு காரியம் செய்தால், அவர்கள் பித்ருலோகத்தில் நிம்மதியாய் இருப்பார்கள் என்பது நம்பிக்கை. 

6 /8

ஒருவரின் இறப்புக்குப் பிறகு 10 நாட்கள், 13 நாட்கள், 16 நாட்கள் என்று காரியம் செய்வார்கள். ஓராண்டு ஆனபிறகு அதாவது 12 மாதங்களுக்குப் பிறகு அவர்கள் இறந்த திதியில் இறந்தவர்களுக்குத் திதி கொடுப்பது தான் முதன்மையான நீத்தார் கடன்.

7 /8

ஆண்டு திதி, மாதத் திதி என இறந்தவரின் திதிக்கு ஏற்ப செய்யும் காரியங்களைத் தவிர, மஹாலய அமாவாசை எனப்படும் ஆடி அமாவாசையில் திதி கொடுப்பது பித்ருக்களை சாந்திப்படுத்தும்

8 /8

பித்ருக்களை சாந்திப்படுத்தும் ஆடி அமாவசை நாளன்று திதி கொடுப்பது, தர்ப்பணம் என சமய சடங்குகளும், அன்னதானம் போன்ற தானங்களை செய்து பசியாற்றும் முக்கியமான நாளாகும்