7th Pay Commission Relief News: மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த நல்ல செய்தி வந்துவிட்டது. கடந்த 18 மாதங்களாக அகவிலைப்படியில் இருந்த முடக்கத்தை மோடி அரசு நீக்கியது. இதனுடன், ஊழியர்களின் டி.ஏ. 11 சதவீதம் அதிகரித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு நிவாரணம் அளிக்கும் மற்றொரு செய்தியை அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
இதுவரை, விடுப்பு பயண சலுகையை (LTC Special Cash Package) பெற்றுக்கொள்ளாத ஊழியர்களுக்கு, இந்த கொடுப்பனவைப் பெற, மோடி அரசாங்கம் மற்றொரு வாய்ப்பை அளித்துள்ளதுள். நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள விளக்கத்தின்படி, எல்.டி.சி தீர்வு தொடர்பான கிளெயிம்கள் மீது 2021 மே 31 க்கு அப்பாலும் (முன்பு இது கால வரம்பாக இருந்தது) பரிசீலிக்கப்படும் என்று அனைத்து துறைகள் மற்றும் அமைச்சகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செலவுத் துறை அலுவலக மெமோராண்டத்தின் படி, 'பில்கள் / கிளெயிம்கள் ஆகியவற்றை தீர்ப்பதற்கான தேதியை நீட்டிப்பது தொடர்பாக எங்கள் துறைக்கு கடிதங்கள் வந்துள்ளன. கொரோனா வைரஸ் நெருக்கடியால் பல சிரமங்களை எதிர்கொண்டதாக மக்கள் மேற்கோள் காட்டியுள்ளனர். இந்த சூழ்நிலையில், அமைச்சகம் நிர்ணயிக்கப்பட்ட கால எல்லைக்கு அப்பாலும் கிளெயிம்களை பரிசீலிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுவாக எல்.டி.சி கிளெயிம்கள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 க்கு முன்னர் தீர்க்கப்படுகின்றன. ஆனால் இந்த முறை கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, மத்திய அரசு அதன் தேதியை நீட்டித்துள்ளது.
இது தொடர்பாக மோடி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. எல்.டி.சி பண வவுச்சர் திட்டம் தொடர்பாக ஊழியர்களின் கோரிக்கை மே 31 தேதிக்கு பிறகும் நிறைவேற்றப்பட வேண்டும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக, பலரால் பில்களை சம்ர்ப்பிக்க முடியாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. எல்.டி.சி சிறப்பு பண தொகுப்பை பயன்படுத்த மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக செயலாளர் சுனில் குமார் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு (Central Government Empoyees) எல்.டி.சி திட்டத்தின் நன்மைகள் கிடைக்கின்றன. ஒரு ஊழியர் ஒரு நிதியாண்டுக்கு ஒரு முறை நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம். குடும்பத்துடன் இரண்டு முறை சொந்த ஊருக்கு செல்லவும் விலகு அளிகப்படுகின்றது.
எல்.டி.சி-யில் விமானப் பயணம் மற்றும் ரயில் பயணச் செலவுகளையும் ஊழியர்கள் பெறுகிறார்கள். இந்த முறை கொரோனா வைரஸ் காரணமாக, எல்.டி.சி பண வவுச்சர் திட்ட கிளெய்மிற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.