ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா; இரவு நேரத்தில் ‘இவற்றை’ சாப்பிடக் கூடாது

நல்ல ஆரோக்கியத்திற்கு இரவில் சரியாக தூங்குவது முக்கியம். தினசரி இரவும் 6 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டியது அவசியம். இது உடலுக்கும் மனதுக்கும் உற்சாகத்தை அளிக்கிறது.  

நல்ல ஆரோக்கியத்திற்கு இரவில் சரியாக தூங்குவது முக்கியம். தினசரி இரவும் 6 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டியது அவசியம். இது உடலுக்கும் மனதுக்கும் உற்சாகத்தை அளிக்கிறது.  

1 /5

சிலருக்கு இரவில் போதுமான தூக்கம் கிடைப்பதில்லை. தூங்க முயற்சித்தாலும் பயனில்லை. இதற்கு காரணம் உட்கொள்ளும் உணவுதான். ஆம், இரவில் நாம் உண்ணும் உணவு நம் தூக்கத்தை பாதிக்கிறது.

2 /5

சாக்லேட்டில் காஃபின் மற்றும் சர்க்கரை உள்ளது. சாக்லேட் ஹார்மோன்களைத் தூண்டுகிறது. இரவில் சாக்லேட் சாப்பிடுவது இரவு முழுவதும் தூக்க பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

3 /5

சந்தையில் கிடைக்கும், கார்ன் பிளேக்ஸ் போன்ற பெரும்பாலான ரெடி டு ஈட் வகை உணவுப் பொருட்களில் சர்க்கரை அதிகம் உள்ளது. இது இரத்த சர்க்கரையின் அளவை அதிகரிகிறது. எனவே, இரவில் தூக்க செல்வதற்கு முன்பு இதை சாப்பிட வேண்டாம். இதை காலை உணவாக சாப்பிடலாம்

4 /5

பெரும்பாலான மக்கள் பூண்டு இல்லாமல் உணவை சாப்பிடுவதில்லை. இதை உணவில் உட்கொள்வது நன்மை பயக்கும். , ஆனால் நீங்கள் இரவில் பூண்டு சாப்பிட்டால் அது உங்கள் தூக்கத்தை நீக்கும். நீங்கள் ஒரு நல்ல இரவு தூக்கத்தை விரும்பினால், உணவில் பூண்டின் அளவைக் குறைக்கவும்.

5 /5

பீட்ஸா, பாஸ்தா, மோமோஸ், நூடுல்ஸ் போன்ற பொருட்களை இரவில் உட்கொள்ளக்கூடாது. இவை இரவில் ஜீரணிப்பது கடினம். இது தூக்கமின்மையை ஏற்படுத்துகிறது. உங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றினால், இரவில் நன்றாக தூங்குங்கள்.