இந்தியாவின் மிக அழகான 5 கிராமங்கள், அதில் உங்கள் கிராமமும் இருக்கிறதா?

பொதுவாக பல இடங்களுக்கும் சென்று வருவதற்கும், சுற்றுலா செல்வதற்கும் விரும்புகிறார்கள். ஆனால் ஊர் சுற்றும் ஆவலை கொரோனா முடக்கிவிட்டது.   கொரோனா சகாப்தத்தில் சுற்றுலா செல்ல முடியவில்லை என்ற கவலை அனைவருக்கும் இருக்கிறது. கவலைப்படாதீர்கள். உங்களை இந்தியாவின் மிக அழகான 5 கிராமங்களுக்கு அழைத்துச் செல்கிறோம். இவற்றைப் பார்த்தால் பார்த்த விழி பூத்தபடி பூத்துக் கிடக்கும்…  

புதுடெல்லி. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்கு வருகிறார்கள். இந்தியாவில் அழகான இடங்கள் எவை என்பது குறித்து நாட்டிலும், வெளிநாட்டிலும் நிறைய விவாதம் நடைபெறுகிறது. யாராவது ஒரு அழகான இடத்தை கற்பனை செய்யும் போதெல்லாம், பனி மூடிய மலைகள், பச்சை பசும் பள்ளத்தாக்குகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளின் காட்சிகள் முதலில் மனதில் தோன்றும். அப்படி பார்க்கும்போது, அந்த இடத்திலேயே வாழ்க்கையை செலவிட வேண்டும் என்றும் தோன்றும். இப்போது இருந்த இடத்தில் இருந்தே அப்படிப்பட்ட மனம் மயக்கும் கிராமங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?  

1 /5

ஸ்மிட் கிராமம்  ஷில்லாங்கின் தலைநகரான மேகாலயாவிலிருந்து 11 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஸ்மிட் என்ற அழகான கிராமம். இந்த கிராமம் அழகான மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. இயற்கையின் அழகு இந்த கிராமத்தில் தெளிவாகத் தெரியும். இந்த கிராமத்தில் மாசு இல்லாத நிலையும் உள்ளது. இங்குள்ள மக்கள் வயல்களில் காய்கறிகளையும் மசாலாப் பொருட்களையும் விளைவித்து வாழ்வாதரத்தைப் பெறுகின்றனர்.  

2 /5

மிரிக் கிராமம் (Mirik Village) மிரிக் என்பது டார்ஜிலிங்கில் உள்ள ஒரு சிறிய கிராமம். அதன் பெயரை விட அழகாக இருக்கிறது ஊரின் தோற்றம். இந்த கிராமம் கடல் மட்டத்திலிருந்து 4905 அடி உயரத்தில் அமைந்துள்ளது. மிரிக் ஏரி என்ற ஒரு ஏரியும் இந்த கிராமத்தில் உள்ளது. இந்த ஏரி கிராமத்தின் அழகுக்கு அழகு சேர்க்கிறது.

3 /5

மலானா கிராமம் (Malana Village)   அழகான மலானா கிராமம் இமாச்சலப் பிரதேசத்தின் குலு பள்ளத்தாக்கின் பசுமையான பள்ளத்தாக்குகளில் அமைந்துள்ளது. இங்கிருந்து, இதயங்களை இசை மயமாக்கும் காட்சிகளைக் காணலாம். இந்த கிராமத்தின் அருகே மலானா நதியும் பாய்கிறது, இது இந்த கிராமத்தின் அழகை அதிகரிக்கிறது.

4 /5

மவ்லினோங் கிராமம் (Mawlinong Village) மவ்லினோங் ஒரு சிறிய மற்றும் அழகான கிராமமாகும், இது ஷில்லாங்கிலிருந்து 90 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த கிராமம் மலைகளில் அமைந்துள்ளது. இங்கிருந்து நீர்வீழ்ச்சிகள் தெளிவாகத் தெரியும். இந்த கிராமம் ஆசியாவின் தூய்மையான கிராமம் என்ற அந்தஸ்தைக் கொண்டுள்ளது. இங்கு எந்த சுற்றுலாப் பயணி வந்தாலும் அதன் அழகு, அவர்களை மற்றொரு முறை வரச் செய்யும் என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை.  

5 /5

கோனோமா கிராமம் (Khonoma Village) கோனிமா கிராமம் கோஹிமாவிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பசுமையான சோலைகளுக்கு மத்தியில் இந்த கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமம் ஆசியாவின் பசுமையான கிராமமாகும். இந்த கிராமத்தில் விலங்குகளும், பறவைகளும்   அதிக அளவில் காணப்படுகின்றன. 250 க்கும் மேற்பட்ட தாவர இனங்களும் இங்கு காணப்படுகின்றன.