இமாச்சல பிரதேசத்தில் உள்ள லஹால் வாடி கிராமம் முழுவதும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளது.
மணாலி: லஹால் பள்ளத்தாக்கின் (Lahaul valley) தோராங் கிராம மக்கள் அனைவரும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். லஹால் ஸ்பிட்டியின் நிலைமை மிகவும் மோசமாகி வருகிறது என்பதே இதன் பொருள். இங்கே கொரோனா (Covid-19) நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சர்வதேசங்களை ஆட்டிப் படைக்கும் கொரோனாவின் தாண்டவம் இந்தியாவிலும் குறையும் பெயரையே எடுக்கவில்லை. இமாச்சல பிரதேசத்தில் உள்ள லஹால் வாடி கிராமம் முழுவதும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இமாச்சல பிரதேசத்தில் கொரோனா சமூக தொற்றாக உருவெடுத்துவிட்டதா என்பது குறித்த விவாதம் சூடுபிடித்துள்ளது.
மோசமான நிலைமையைக் கருத்தில் கொண்டு, சுற்றுலாப் பயணிகளின் வருகையையும் மாவட்ட நிர்வாகம் தடை செய்துள்ளது. ரோஹ்தாங் சுரங்கப்பாதையின் வடக்குப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை.
கொரோனா தொற்றுநோயின் ஆரம்ப கட்டத்தில் இமாச்சலப் பிரதேசம் சில நாட்கள் தப்பிப்பிழைத்தது, ஆனால் லாக்டவுன் நீக்கப்பட்ட பின்னர் கொரோனா பாதிப்பு துரிதமாக அதிகரித்தன. மேலும் இந்த கிராமம் கொரோனாவால் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால்,நிர்வாகம் குளிர்காலத்தின் தொடக்கத்திலேயே நிர்வாக சிக்கல்களை சந்திக்கிறது.
லஹோல் ஸ்பிட்டி மாவட்டத்தின் இந்த கிராமத்தில், 52 வயதான நடுத்தர வயதுக்காரர், சமூக தொலைவை நேர்மையுடன் பின்பற்றினால் கொரோனாவைத் தவிர்க்க முடியும் என்று கூறுகிறார். 52 வயதான பூஷன் தாக்கூர் கொரோனா வைரஸின் பிடியில் சிக்கிய கிராமத்தில் இருந்து தப்பிப் பிழைத்த ஒரே நபர்அதேசமயம், பூஷனின் மனைவி மற்றும் முழு குடும்பமும் கொரோனா பாசிட்டிவ் என பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
முதல் 2-3 மாதங்களுக்கு லாஹெளல் ஸ்பிட்டி மாவட்டத்தில் ஒரு கொரோனா வழக்கு கூட இல்லை என்ற நிலைமை தற்போது தலைகீழாக மாறிவிட்டது. அதுமட்டுமல்ல, கொரோனா பாதிப்பு இந்த முறை நிலைமை கட்டுப்படுத்த முடியாததாகிவிட்டது.