மூளையை சுறுசுறுப்பாக வைக்க உதவும் 4 சத்தான உணவுகள்!

65 வயதுக்கு மேற்பட்ட நபர்களில் சுமார் 10-20% அளவு அறிவாற்றல் குறைபாடு ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றது, இதனை தடுக்க உணவுப்பழக்கத்தை மாற்றலாம்.

 

1 /4

சால்மன், டுனா மற்றும் மத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன.  மூளை 60% கொழுப்புகளால் ஆனது, அதில் பெரும்பாலானவை ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள். இதனால் மூளை சுறுசுறுப்பாக இயங்கும், இது 65 வயதிற்கு மேற்பட்ட ஆரோக்கியமான பெரியவர்களின் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கு உதவுகிறது.  

2 /4

ஆளி விதைகளில் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள், குறிப்பாக ஒமேகா -6 மற்றும் ஒமேகா -3 ஆகியவை நிறைந்துள்ளன.  வயதானவர்கள் இதனை உணவில் சேர்த்துக்கொள்ளும்போது அறிவாற்றல் அதிகரிக்கும்.  

3 /4

புளுபெர்ரிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் அதிகம் உள்ளன, அவை அறிவாற்றலை மேம்படுவதோடு, நினைவாற்றலையும் அதிகரிக்க உதவுகின்றன.  மேலும் இது வையாது முத்துவின் காரணமாக ஏற்படும் மூளையின் மந்தத்தன்மையை நீக்குகிறது.  

4 /4

வைட்டமின்கள் ஏ, ஈ மற்றும் சி போன்றவை அதிகளவில் பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படுகின்றன, எல்லாவிதமான காய்கறிகளும் உடலுக்கு நன்மையை அளிக்கின்றன.  வைட்டமின் கே அதிகமுள்ள ப்ரோக்கோலி போன்றவற்றை சாப்பிடுவது மூளையை சுறுசுறுப்பாக்கும்.