US elections: அமெரிக்க தேர்தலில் டிரம்ப் வெற்றியா? உண்மை நிலவரம் என்ன?

US Elections 2026: அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் தற்போது முன்னிலையில் உள்ளார். வட கரோலினாவில் கமலா ஹாரிஸை தோற்கடித்துள்ளார். 
1 /6

கடந்த தேர்தலில் தோல்வியை சந்தித்து இருந்த டிரம்ப் தற்போது அரசியல் மறுபிரவேசத்தை நெருங்கி வருகிறார். ஒரு சில இடங்களில் பின்னிலை அடைந்தாலும் அமெரிக்கா முழுவதும் வலிமையை காட்டி வருகிறார்.

2 /6

ஹிஸ்பானிக் வாக்காளர்கள் மற்றும் பொருளாதாரத்திற்கு முன்னுரிமை அளிப்பவர்கள் டிரம்ப்க்கு தங்களது ஆதரவை அளித்து வருகின்றனர். நேற்று நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை தோற்கடித்தார். 

3 /6

காலை 11 மணி நிலவரப்படி டிரம்ப் 230 எலெக்டோரல் கல்லூரி வாக்குகளையும், ஹாரிஸ் 210 வாக்குகளையும் பெற்றுள்ளனர். ஜனாதிபதி பதவியை பெற மொத்தம் 270 வாக்குகள் தேவை.

4 /6

2020 ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு அமெரிக்காவில் விலைவாசி கடுமையாக உயர்ந்தது. இதனால் குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தினர் டிரம்ப்க்கு தங்களது ஆதரவை அளித்துள்ளனர்.

5 /6

பொருளாதாரம் முக்கியப் பிரச்சினையாக இருந்த வாக்காளர்கள் டிரம்பிற்கு அதிகளவில் வாக்களித்தனர், குறிப்பாக அவர்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட நிதி ரீதியாக மோசமாக இருப்பதாக அவர்கள் உணர்ந்தால்.

6 /6

அமெரிக்கா முழுவதும் உள்ள கிட்டதட்ட 45% மக்கள் கடந்த 4 ஆண்டுகளில் தங்களின் வருமானம் மற்றும் குடும்பத்தின் நிதி நிலைமை மோசமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.