இந்தியாவின் மல்டிபிளெக்ஸ் திரையரங்கம் என்றாலே நம் நினைவிற்கு வருவது PVR. இந்த பிரபலப் பெயர் எப்படி உருவானது என்று இங்குப் பார்ப்போம்.
மக்கள் அனனவரும் விரும்பி செல்லும் இடமாக PVRயில் வசதி உள்ளது. இங்கு சாப்பிட ஸ்னாக்ஸ் முதல் அனைத்து வகையான திண்பண்டங்களும் வாங்கிச் சாப்பிட ஏதுவான இடம். இங்கு வந்து செல்லும் மக்கள் ஏராளமானோர் படம் பார்த்துவிட்டு செல்பி எடுத்து மகிழ்வர். மேலும் இதன் விரிவாக்கம் மற்றும் உருவானக் கதையைப் பார்ப்போம்.
PVR திரையரங்கின் ஸ்க்ரீனின் அளவு மிகப்பெரியது. மற்ற திரையரங்கைவிட ஒப்பிட்டுப் பார்த்தால் இங்கு பெரிய ஸ்ரினில் படம் ஓடும். இந்த PVR இந்தியாவில் இருக்கும் பெரிய பெரிய மால் மற்றும் மல்டிப்ளெக்ஸ்களில் இருக்கும்.
PVR திரையரங்கின் முழுப்பெயர் “பிரியா விலேஜ் ரோட்ஷோ” என்ற வித்தியாசமான பெயர். பிரியா எக்ஸிபிட்டர்ஸ் மற்றும் விலேஜ் ரோட்ஷோ இந்த இரு நிறுவனங்களின் முயற்சியால் PVR நிறுவனம் உருவானது.
PVR முதன்முதலில் 1997ஆம் ஆண்டு டெல்லியில் வசந்த் விஹாரில் தொடங்கப்பட்டது. அதிக லாபம் இதில் ஈட்ட ஆரம்பித்ததால் மேலும் பல இடங்களில் பல பிரேன்செஸ் அறிமுகம் செய்தனர்.
PVR எங்கெல்லாம் அமைந்துள்ளது எத்தனை பிரான்செஸ் இருக்கிறது என்று கேட்டால் அசந்துவிடுவோம். அந்த அளவிற்கு அவர்களின் வளர்ச்சி பல மடங்குப் பெருகி வளர்ந்துள்ளது.
டிசம்பர் 2023 ஆம் ஆண்டில் எடுத்த கணக்கெடுப்பின்படி பார்த்தால் இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட இடங்களில் இருக்கும் 114 நகரங்களில் 359 திரையரங்குகளில் 1747 திரைகளை PVR அமைத்துள்ளது.
PVR திரையரங்கம் உள்ளே சென்றால் ஒரு பிரம்மாண்டமான லூக்கில் அமைந்திருக்கும். திரையரங்களில் ஒலிக்கும் சத்தங்கள் அரங்கம் அதிரும்படி கேட்கும். இதனை மக்கள் மிகவும் விரும்புவதால் மக்கள் விருப்பத்திற்கேற்ப இவையெல்லம் அமைக்கப்பட்டுள்ளன என்றுக் கூறுகின்றனர்.
பொதுவாக அனைத்துத் திரையரங்கையும் தோற்கடிக்கும் விதமாக இந்த PVR திரையரங்கம், மக்களுக்காக நவீன வசதிகள் பலவற்றை உள்ளடக்கி கட்டப்பட்ட பிரம்மாண்டக் கட்டமைப்பு என்றுக் கூறப்படுகிறது.